பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
287


நிறத்தைக் குறிப்பன. இவ்வழிகுை பொன்னாற் செய்யப்பட்டுச் சூடப்படுவதுண்டு, 'பொன் புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ' - எனப் பாலைக் கொளதமனார் பொன் புனை' என்று புனை' என்னும் சொல்லை அமைத்துப் பொன்னால் புனையப்படுவதை-செய்யப் படுவதைக் காட்டினார். மலையாள நாட்டார் இவ்வழிஞையைக் கொற்றான்' என வழங்குவர். இவ்வாறு புறநானூற்றுப் பழைய உரைகாரரும் எழுதிக்காட்டினார். "கொற்றான்’ என்பது, பொற்கொற்றான். கருங்கொற்றான், முடக்கொற்றான் (முடக்கத்தான் என்பது நாட்டு வழக்கு) நூழிற் கொற்றான், நந்தைக் கொற்றான் எனப் பலவகையினது. புறப் பூவைத் தரும் உழிஞை பொற் கொற்றானாகும். கொடியும் தளிரும் பூவும் பொன்வண்ண மஞ்சள் நிறங்கொண்டமையால் இப்பெயர் பெற்றது. எனவே, உழிஞைப் பூவின் நிறம் மஞ்சள் கொடியின் கணுப் போன்ற பகுதியில் இலையுடன் இப் பூ பூக்கும். பூ சிறியது. இலையுஞ் சிறியது. பூவை மட்டும் தனியே கொய்து பயன்கொள்ளும் அளவில் காம்பு அமையவில்லை. எனவே இப்பூவை மாலையாகக் கட்டத் தளிருடன் சேர்த்தே தொடுக்க நேர்ந்தது. கபிலரும், . சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி' யதைக் காட்டினார். தலையிற் புறப் பூவாகச் சூடும்போதும் ஒன்றிரண்டு கணுக்க ளோடு கொடியைத் துண்டாக்கிக் கொடியுடனே சூ டி க் கொண்டனர். - ஒண்டளிர்......- ، . . .. . . . ... است ... مم. " நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி' -என இடைக்குன் றுணர்கிழார் காட்டினார். இவ்வாறு கொடியோடு புறப் பூ சூடப்படுவது அக்காலத்தில் அடிப்பட்ட பழக்கமாக இருந்தது; யாவரும் அறிந்த நடைமுறையாகவும் இருந்தது. 1. பதிற் : 22 : 27. 2 பதி ; f8 :18, 8 புறம் ; 76; 8-5.