பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288


எருமைச் செம்மாப்பு

ஒரு கடா எருமை. அழகானது. மழைநீர் ததும்பும் குளத்தில் நீராடிக் கரையேறியது. திடீரென்று வீர ந ைட : போட்டது. காரணம் என்ன? கரையில் களைந்த கொடி ஒன்றை யாரோ வீசி எறிந்துள்ளனர். பூவோடு கூடிய அக்கொடி இவ்வெருமையின் தலையில் விழுந்தது. கொம்பில் சிக்கிக் கொண்டது. கொடிப் பூ தலையில் ஏறிய உடனேயே இதற்கு வீரம் தலைக்கேறிவிட்டதாம். போருக்குச் செல்லும் வீரனது வீர உணர்வு கொப்பளித்துச் செம்மாந்துவிட்டதாம். இச்செம் மாப்பைக் கண்ட மதுரைக் கண்ணங்கூத்தனார், 'கார்ச்சேண் இகந்த கரைமருங்கில் நீர்ச்சேர்ந்(து) எருமை எழில்றுை எறி பவர் சூடிச் - செருமிகு மள்ளரில் செம்மாக்கும்' - என்று பாடினார், இவ் உழிஞைப் பூ அரசரது சின்னப் பூவுடனும் பிற பூக்களுடனும் இணைத்துச் சூடப்படுவது உண்டு. ஆனால் ஒப்பனை கருதிச் சூடப்படுவதன்று. ஒப்பனைக்கு இப் பூவைப் பயன்படுத்தாததாற் போலும் கபிலர் தொடுத்த தமது குறிஞ்சி மேடையில் இப்பூவை வைத்தாரல்லர். ஒப்பனையில் இடம் பெறாது போயினும் ஒப்பருந் தமிழ் ஒலியில் இடம்பெற்றது. சிறப்பு ழகரத்தை இடையிற் பெற்று "உழிஞை ஆயிற்று. . இது ஒருவகைக் காட்டுக் கொடி, பாறையிலோ சேற்றிலோ படராதது. எனவே, இஃது முல்லை நிலப் பூ. இதன் மாற்றுப் பெயர் சிறுபூளை என நிகண்டுகள் 2 குறித்துள்ளன. பூளை என்பது புதர்ச்செடிவகை. எனவே, கொடி வகையான உழிஞை இவ்வகையில் சிறு பூளை எனப்பெயர் கொள்ளவில்லை. உழிஞைப் பூ பூளைப் பூ போன்ற அமைப்புடை யது. ஆனால் அளவில் அதைவிடச் சிறியது. பூவகையால் சிறு பூளை எனப்பட்டதுபோலும். குறிஞ்சிப் பாட்டில் 'குரீஇப் பூளை" என்றதற்கு நச்சினார்க்கினியர் சிறுபூளை' என்று பொருள் எழுதி 1 கார், நா : 31, - * "உழிஞை சிறுபூளை என உரைத்தனரே! -சேந்தன் திவாகரம், மரப்பெயர். ,