பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292


"மணி மருள் நொச்சி" யாம். நீல மணி போன்ற நிறம் எனின் கருநீல நிறம். அதனிலும், 'மணி ஏர் நொச்சி'2 என நீலமணி போன்று அழகு பெற்ற நிறம் எனப்பட்டது. . இதன் அரும்பு நண்டின் கண் போன்றது எனின் பூவின் அளவு புரிகின்றது. தனியொரு பூ மிகச் சிறியது. அதனைக் கொய்து புறப் பூவாகச் சூடவோ மாலையாக்கி அணியவோ இயலாது. எனவே கொத்தாகவே பயன் கொண்டனர். எத் தகைய கொத்து அது? மணிக்கொத்து. அதனால், "மணிக்குரல் நொச்சி' எனப்பட்டது. குரல் கொத்தைக் குறிக்கும். எனவே புறப் பூவாகச் சூடப்படும் போது கொத்தோடு கிள்ளி எடுத்துச் சூடினர். கொத்து உருவில் செயற்கையிற் செய்து சூடினர். திருவிழாவை அறிவிக்கும் போதும், காக்கைக்கு G578) படைப்பை பலியிடும் போதும் குயவன்' நொச்சித் தெரியல் சூடி" யதைக் கண்டோம் அந்தத் தெரியலும், 'மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி's என்றும் 'ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி’4 -என்றும் கொத்து மாலையாக அமைந்ததே. நொச்சிப் பூ சிவபெருமானுக்கும் சூட்டப்பட்டது. 'நொச்சியே வன்னி கொன்றைமதி கூவிளம் உச்சியே புனைதல் வேடம்' என்பது ஞானசம்பந்தர் பாட்டு. மற்றும் தினை விதைக்கக் கொல்லையை உழத் தொடங்கு வோர் பொன்னேர் பூட்டும் முதல் உழவின்போது நொச்சித் தழை மாலையைச் சூடிக் கொள்வர். மதுரைக் கண்ணங் கூத்தனார், குறு : 188 : 5 தர் ; 184 ; 9 தற் : 298 : 1. தற் : 200 : 2 அன.கே திருக்கச்சி ஏகம்பம்:2:2:1,2, .