பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

'கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி இரும்புனம் ஏர்க் கடி கொண்டார்”1. என்று காட்டியுள்ளார். - புறப் பூவாகிச் சிறக்கும் நொச்சி இவ்வாறு பொது நிகழ்ச்சிக் கும் இடம் தந்தது. அக ஒழுக்கத்திலும் சுவையான இடம் பிடித்துக் கொண்டது. காதலன் தனது காதலிக்கு அன்புக் கையுறையாக இலை தழை, பூவால் ஆடை தொடுத்துக் கொடுப்பான். இத் தழை ஆடை நொச்சிப் பூவுடன் கூடிய தழைகளாலும் தொடுக்கப்படும். 'ஐது அகல் அல்குல் தழையணிக்கு ஊட்டும் கூழை நொச்சி'? -என்னும் கயமனார் பாடல் தழையாடைக்குக் கொய்ததால் நொச்சி மரம் கூழையாகிக் குறைந்த தையும் காட்டுகின்றது. குறைபடும் அளவில் நிறையக் கொய்து தொடுத்துள்ளார்கள். இது தழையும் பூவும் அகத்தில் பிடித்த இடம். நேரங் காட்டும் நொச்சி மற்றொன்று, பூ மட்டும் காதல் களவிற்குத் துணை போன இடம். காதலியைக் களவில் கூட வரும் காதலன் இரவில் உரிய நேரத்தையும் இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்வான். இது குறி யீடு' எனப்படும். களவிற்கு உரிய நேரம் நல்ல இருளாகவும் நடு இரவாகவும் அமைய வேண்டும். அதனை, 'நொச்சிப் பூவுதிர் நள்ளிருள் தடுதாள்’’3 -எனக் காட்டினார் கல்லாடனார். இதுகொண்டு நொச்சிப் பூ நள்ளிருள் நடு யாமத்தில் கொத்தாக உதிரும் என்பதையும் அறியலாம். இதனை அறிகுறியாகச் சொல்லியுள்ளான் காதலன். நள்ளிரவு அமைதியான நேரம். காதலனைக் கூடுவதற்கு அவன் குறித்த இந்நேரத்தை எதிர்நோக்கிக் காதலியின் கண்கள் 1 கார்: தா 39 : 2, 8. 3 கல் : 2 : 18 2 அகம் : 275 : 16, 17