பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/331

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
295


கரிய நொச்சிப் பூங் கொத்துடன் தழையும் ثالثلاثة தழை உடை மெல்லிய மகளிரது இடையில் கட்டப்பட்டு அழகிய பெண் குறியை மறைத்ததையும். ‘கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரு உத்தன்ழ் மெல்லிழை மகளிர் ஐதகல் அல்குல் தொடலை பாகவும் கண்டனம்’’’ -என்றார். காதல் நன்மரம் நொச்சிப் பூ இவ்வாறு அகத்திணையிலும் புறத்திணை யிலும் இணைந்து நின்று ஈடுகொடுத்ததை மோசி சாத்தனார் என்னும் புலவர் நினைந்து பார்த்தார். நீலமணிக் கொத்தாக நொச்சிப் பூங்கொத்தைக் கண்டார். இப்பூவையும் தழையையும் ஈன்ற தாயாம் நொச்சி மரம் அவருக்கு ஒர் அன்பு மரமாகப் பட்டது. 'காதல் நன் மரம்’ என்று பட்டம் சூட்டினார். அம் மரத்தை நேர்முகமாக நிறுத்திப் பாராட்டுகின்றார்: - மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி” யே -என்று அழைக்கின்ருர். சற்று உயர்வு நவிற்சியாகவே, 'போதுவிரி பன்மா னுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நிமற் றிசினே' - என்கின்றார். பூமரங்களி லெல்லாம் சிறந்த மரமாம்! காதல் நன் மரமாம்! அப்படி என்ன சிறப்பு? என்ன காதல்? கடியுடை வியன் நகர் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல் குலும் கிடத்தி - தழையுடையாக மகளிர் இடையிற் சூழ்ந்து கிடப்பது ஒன்று. இஃது அகச்சிறப்பு: அகக்காதல். - காப்புடைப் புரிசை (கோட்டை) புக்கு மாறு அழித்தபின் ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை - பீடுகெழு சென்னிக் கிழமையும் தின தே'2 - நொச்சிப் 1. புறம் : 271 : 2-4 - 2 புறம் : 271 : 2 - 8.