பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296


போரின் சின்னப் பூவாக வீரனது தலைமேலும் உரிமையோடி ருத்தல் இரண்டாவது வீரச்சிறப்பு: போர்க்காதல், இப்பாடல், நொச்சிப் பூ பற்றிய ஒரு முத்திரைப் பாடல் என 邸Dstó。 நொச்சி இலை வழிப்பாட்டுக்குப் பயன்படும் இலை. வில்வம், துளசி போன்று ஒரு மன வீச்சுள்ளது. இதனால் வழி பாட்டிற்குப் பயன்படுத்தும் இலைக்குழுவில் (பத்திரத்தில்) இடம் பெற்றது. பெயரில் நொச்சி நொச்சியால் ஒர் ஊர் பெயர்பெற்றது. நொச்சி நியமம்' என்பது அது. திருச்சிக்கு அண்மையில் உள்ள ஊர் இக்காலத் தில் நொச்சியம்’ என அழைக்கப்படுவது. இவ்வூர்ப்புலவர் ஒருவர் நொச்சி நியமங்கிழார் எனப் பட்டார். நொச்சிக்குச் 'சிந்துவாரம் என்றொரு பெயரைச் சேந்தன் திவாகரம் குறித் துள்ளது. கபிலரும் குறிஞ்சிப்பாட்டில் சிந்துவாரத்தைக் குறித் துள்ளார். இதற்குக் கருநொச்சி’ என்றே பொருள் குறிக்கப் பட்டுள்ளது. புறப்பூவில் இஃதொன்றே கருநிறத்தது. ஆனால் இருட்டில் விழும் பூ. இருட்டு வீழ்ந்தால் வெளிச்சம் தோன்றுமன்றோ? வெளிச்சம் தரும் தூய வெள்ளைப் பூ தொடர்ந்து பூக்கின்றது, போர் மலர் தும்பை தம்பை - போர் 'தும்பை (திணை) என்பது குடும் பூவினாற் பெற்ற ೧uu!' – என்றார் நச்சினார்க்கினியர், அனைத்துத் திணை களும் பூக்களாலேயே பெயர்பெற் றனவாயினும் நச்சினார்க்கினியர்