பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298


தாகலாம். இக்காலத்துச் செடியியலார் இதனைத் துளசி @ສr. என்றே குறிப்பர். - தும்பைச் செடியில் சிறு தும்பை, பெருந்தும்பை, கெள தும்பை, பேய்த் தும்பை, காசித் தும்பை, மஞ்சட் காசித் தும்பை, சிவப்புக் காசித்தும்பை எனப் பலவகைகள் o-TnT. இவற்றுள் பெருந் தும்பையின் பூவே புறப் பூவாகக் கொள்ளப்பட்டது. இச்செடி துவண்டு கொடுக்கும் சில பசுங்கொப்புகளாக வளரும். இக்கொப்பின் நான்கைந்து அங்குல வளர்ச்சிக்கு மேல் இரண்டு இலைகள் கொம்பு போலக் கவடு விடும். கம்பரும் இதனைக் கவட்டிலை என்றார். இக் கவட்டிலையை ஒட்டியே பகங்கிண்ணம் போன்று பூ அமையும். பசுமையான புற இதழ்கள் பெருஞ்சிரக அளவில் பல சுற்றுவட்ட அமைப்பாகச் செறிந் திருக்கும். குழாய் போன்ற இப்புற இதழ்களில் வெண்மையான அக இதழ்கள் விரியும். ஒவ்வொரு குழாயிலும் ஒவ்வொன்றாக அகவிதழ் அமைந்திக்கும் இப்பசுங் கிண்ணத்தின் மையத்தில் அடுத்த இரண்டு கவட்டிலைகள் தளிர்க்கும். இவ்விலைகளின் இடையிலிருந்து பசுங்கொப்பு தோன்றித் தொடரும். இவ்வாறாகத் தும்பைப் பூ தொடர் பூவாகப் பூக்கும். இத்தொடர் நான்கு அல்லது ஐந்திற்கு மேல் போகாது. இவ்வாறு தொடர்ந்து பூத்துக் கொண்டே நீண்டு தோன்றுவதாற் போலும் கம்பர் இதனை, "நெடுந் தும்பை' என்றார். இதன் அல்லியாம் அக இதழ் தூய வெண்மை நிறங் கொண்டது. மூன்று சிறு இதழ்கள் ஒட்டிய ஓரிதழாக நாக்கு வடிவில் வெளிப்புறத்தில் விரி யும். இவ்விதழின் அடிக்குவிவில் வெண்மையான முட்டை வடிவக் குமிழான ஒர் அகவிதழ் துருத்திக் கொண்டிருக்கும். இதற்குள் மகரம் அமைந்திருக்கும். குழாய் போன்ற புற இதழ் ஒவ்வொன்றிலும் இவ்வாறான அகவிதழ் ஒவ்வொன்று செருகியது போன்று மலரும். புற இதழ்களின் கிண்ணத் தொகுப்பு பச்சை நிறங் கொண்டது. அனைத்துப் புற இதழ்களிலும் வெள்ளை அக இதழ் தோன்றாது. ஆங்காங்கு சில், பல புற இதழ்களில் தோன்றும் நிலையில் இத்தொகுப்புக் கிண்ணம் பசுமையாகக் காட்சி தரும். இதனால் பைந்தும்ப்ை: எனப்பட்டது. கம்ப முதற்போர்ப் படலம் : 21 t 4