பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300


“..... ...........பாசிலை கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே' என அடை நெடுங்கல்வியார் என்னும் சங்கப் புலவரும் பாடியுள்ளார். கல்வியார் "துதல் அசத்தோனே' என்றது நெற்றியில் தவழு மாறு தலையில் சூடியதைக் குறிக்கும். 'தும்பைச் சிகழிகை (தலையுச்சி மாலை) மவுலி சூட்டினான்' என்றும், போந்தையொடு முடித்த பருவத் தும்பை - . ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய’3 - என்றும் கண்ணியாகச் சூடப்பட்டதைக் காட்டுகின்றன. “பொலந்தொட்டுப் பைந்தும்பை “பொலந்தும்பை' எனப்பட்டவை செயற்கையில் பொன்னால் மிகுதியாகச் செய்யப் பட்டதைக் காட்டுகின்றன. இயற்கைப் பூ வெண்மை என்பதோடு தூய வெண்மை என்றும் போற்றப்படுவது. இக்கால வழக் கிலும் 'தும்பைப் பூ போன்று தூய வெண்மை’ எனப்படும். நிறத்தில் மட்டுமன்றி இதனைச் சூடுவதால் நேரும் செயலும் துய்மைகொண்டது. தும்பை-தாய்பை தொடக்கத்தில் கண்ட புறப்பொருள் வெண்பா மாலைப் பாடல் தும்பையை, "துப்புடைத் தும்பை' என்றது. துப்பு' என்னும் சொல் வன்மை, உணவு, நுகர்வு, பவளம் முதலிய பல பொருள்களைக் கொண்டது. இங்கு மலரைக் குறித்து அடை மொழியானது. எனவே, வலிமைப் பொருள் மெல்லிய மலருக்குப் பொருந்தாது. போர்ப் பூ உணவாகாது. மோந்து நுகர்தற் குரியதாக இங்கு குறிப்பதால் பயனின்று. பவளம் ஒத்துவராது. பின் என்ன பொருளில் அடைமொழியாகிய து? . 1 tipun : 282 : 14, 15, 2. கத். பு: முதனாள் : 24 : 4. 3. சிலம்பு : 26 - 226,227,