பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301


'அனுபவமும் துய்மையும் துப்பென லாகும்”1 "துப்பு துர பாவனம் வாலும் தூய்மை'2 -எனத் துப் பிற்குத் தூய்மை என்னும் பொருளையும் நிகண்டுகள் வகுத்துள்ளன. "துப்புடை மணவிற்றாகிக் கங்கைநீர் சுருங்கிக் காட்ட'8 -என்று கம்பரும் துாய்மைப் பொருளில் பாடினார். துப்பின் அடியாக வளர்ந்த துப்புரவு என்னும் சொற்கும் தூய்மை என்னும் பொருள் உண்டு. 'துப்புரவார் சுரி சங்கு'4 -எனச் சங்கின் தூய்மையைத் "துப்புரவு' என்னுஞ் சொல்லால் அப்பர் காட்டினார். இக்காலத் தும் "துப்புரவு செய்தல்’ என்பது தூய்மைப்படுத்தலைக் குறிப் பதாகவும் வழங்கப்படுகின்றது. துப்பு மென்மை பெற்றால் தும்பு’ என்றாகும். தும்பு என்னும் சொல்லும் தூய்மைப் பொருளுடையது. தும்பு + ஐ எனத் "தூய்மையை உடையது' என்று பெயர்ப்பொருளை விளக்க தும்பை என்னும் சொல்லும் இடந்தருகின்றது. எனவே, "துப்புடைத் தும்பை என்பதற்குத் தூய்மையான தும்பை எனப்பொருள்கொள்ள வேண்டும். நிறத்தாலும் தூய்மை; மறத்தாலும் தூய்மை. போர் மறத்தால் இப் பூவால் நேரும் துாய்மைநெறி குறிக்கத் தக்கது. தும்பைத் திணையை விளக்கிய தொல்காப்பியர், 'மைந்து பொருளாக வந்த வேந்தனைச் 335 சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப என்றார். இதில் தும்பைத் திணையைச் சிறப்பிற்று' எனச் சிறப்பித்துள்ளார். இச்சிறப்பை நச்சினார்க்கினியர் பின்வருமாறு விளக்கியுள்ளார் : பிங், தி 3658 சேந், தி : பண்புப்பெயர் கம்ப : எதிர்கோள் : 2 : 2 அப், தே : தனித்திரு 2 : 8 தொல், பொருள் 70.