பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302


இதனைச் சிறப்பிற்று என்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனையாற் செய்வனவும், தேவராற் பெற்ற வரங்களாற் செய்வனவும் கடையூழிக்கண் தோன்றிய வாதலின் சிறப்பிலவாம். அவை, சிறுபான்மை கொள்க' இதனால், போர்க்களத்தில் அறத்தில் திரிதல், வஞ்சனை செய்தல் முதலியன நெறித்துய்மை அற்றவை. வலிமைக்கு நேர் வலிமை என்றில்லாத, வரத்து வலிமை சிறப்பில்லை. இவை யல்லாமல் வீரத்திற்கு வீரம், வீரனுக்கு வீரன், வலிமைக்கு வலிமை, திறத்திற்குத் திறம் என்னும் நெறித்துய்மைகொண்டது தும்பைத் திணை என்றாகின்றது. சிறப்பில்லாதன யாவும் தெய்வக் கதைகளில் அமைந்துள்ளமையால் விட முடியாமல் சிறுபான்மை கொள்க’ என்று இழுத்துக்கட்டி அமைதி கூறினார். நெறித் துய்மைத் தும்பைச்செயல் எத்தகையது? தும்பைப்போர்ப் பகைவரும் துயவராதல் வேண்டும். அவர் 'தும்பைப் பகைவர்' எனப்பட்டனர். எதிர்த்துத் தும்பை சூடும் பகைவர் விழுப்புண் பெற்ற வீரத் தகுதி யுடையவராதல் வேண்டும். அத்தகைய வீரரை எதிர்ப்பதே "துப்புடைத் தும்பை'ப் போர். விழுப்புண் பெறாத வீரரை எதிர்த்துத் தும்பையைச் சூடமாட்டார். இதனை, 粤彦 ... ... ... ... ... . ... வடுவாழ் மார்பின், அன்பு சேர் உடம்பின் நேர்ந்தோர் அல்லது தும்பை சூடாது' விடுத்தனர் என்பதால் உணரலாம். இத்தகைய போர் நெறித் துய்மையை எண்ணியும் துய வெண்ணிறத் தும்பை புறப் பூவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம் போலும். அடைமொழித் தம்பை 感 ಕು இவ்வாறு நெறி தழைக்க நிற்பதால் 'தழைத்த தும்பை எனறு புறக்கருத்து பொருந்தக் குறிக்கப்பட்டது. இத் தழைத்த தும்பையால் வென்றோரைப் பாடும் புலவரும் 'தும்பைப் புலவர்' எனப்பட்டனர். கொக பொருள் 10 •- : د.. م.. ه t தை பதி. ப . . 42 : 6. 2 பதி, பு: 14:18, 9, ; * ് 2 4–