பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/339

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


303 "ஆடுகொளக் குழைத்த தும்பைப் புலவர் பாடுதலை முற்றிய கொற்ற வேந்தே' -என ஐயூர் மூலங் கிழார். புலவர்க்குப் பட்டஞ் சூட்டினார். புறப் பூவாக மார்பில் அணியத் தாராகவும் தும்பைப் பூ கொத்தோடு தொடுக்கப்படும். போர்க்கோலத்தில் பொகுட்டெழினி யைக் கண்ட அவ்வையார், "அலச் பூந் தும்பை அம்பகட்டு மார்பின் என் ஐ’2 -என்றார். வீரத்துறைக்கு அன்றி ஒப்பனைத் துறையிலும் தும்பை மாலையாயிற்று. காமச் சிலம்பம் அறியாத பெதும்பைப் பருவப் பெண் ஒருத்தி. அவளைக் காமக் கலையில் பட்டம்பெற்ற ஒரு தலைவன் அணைத்தான். அணைப்பின் கிளுகிளு’ப்பை அறியாத அவள் அவனது மார்பை விலக்கினாள். விலக்கியவளது இளம் பருவ மார்பை அம்மூவனார் என்னும் புலவர் 'தும்பை மாலை இளமுலை’3 -எனத் தும்பை மாலை யோடு எழுவதைக் காட்டினார். இதுகொண்டு தும்பை மாலையை ஒப்பனைக்காகத் தொடுத்து அணிந்தனர் என்பதை அறியலாம். "இதனை இளமகளிர் அணிவர்' என்னும் உரைக்குறிப்பால் இளம் பெண்கள் விளையாட்டாகவும் தொடுத்து அணிந்தனர் எனக் கொள்ளலாம். விளையாட்டுப் பெண்கள் மட்டுமல்லர், திருவிளையாட்டு புரியும் சிவபெருமானுக்கும் சூட்டும் பூ ஆயிற்று. ஆயினும் புறப் பூவாக அமைந்த தொடர்பிலேயே தும்பைப் பூ பெரும் சிறப்பைப் பெற்றது. இதற்குத்தான் எத்துணை அடை மொழிகள்? புறவிதழ்ப் பசுமையால் - பைந்தும்பை" துவளும் இளமையால் - "பருவத் தும்பை" தொடர் பூவாகையால் - 'நெடுந் தும்பை' தழைத்தமையால் - 'குழைத்த தும்பை' 1 புறம் ; 21 ; 11, 12. 2 புறம் :98 : 1. 8 ஐங், நூ : 127 : 2.