பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


307 'வல்லிற் கல்வியிற் படையிற் கொடையில் - வெல்லுநர் அணிவாகை வெற்றிப் பூவே'- எனத்திவாகரம் (மரப் பெயர்) வெற்றிப்பூ என்றே காட்டிற்று. எவ்வாறாயினும் வாகைப் பூ வெற்றிச் சின்னம். அதன் பெயரால் வாகைத் திணை பெயர் பெற்றது. இப் பூவை வழங்குவ து பெருமரம். வானளாவிய பெருமரம். ' மால் அமர் பெருஞ்சினை வாகை ' - எனச் சாத்தனார், கருமுகில்கள் வந்து அமரும், என்று குறிக்குமளவில் பெரிய மரம். எனவே, வாகைப் பூ கோட்டுப் பூ. அத்த வாகை ஆலமரம் போன்று கிளை பரப்பி நிற்கும் இம்மரத்தின் அடியிடம் 'வாகைமன்றம்' எனப்பட்டது. மன்றம் என்பது அக்காலத் தில் பொதுவில் பலர் கூடும் மரத்தடியிடத்தைக் குறித்தது. ஆல மரத்து இடம் முதலில் மன்றம் .ானப்பட்டது. பின்னர், பரவிய பிற மரத்தின் அடியிடமும் இலக்கியப் பாங்கி மன்றம் எனப்பட்டது. இவ்வகையில் மணிமேகலை வாகை மன்ற த்தைக் காட்டுகின்றது: 'கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய் பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் மாமலர் பெருஞ்சினை வாகை மன்றம்’ - என்பதில் இம் மரச் சூழலில் வெப்பமான முள்மரம், புதர்ச்சூரை, கள்ளி, பசிப்பேய் குறிக்கப்பட்டன. இவையாவும் பாலைநிலக் கருப் பொருள்கள். இவற்றோடு வாகை சொல்லப்பட்டுள்ளது. சேந்தங் கண்ணனார் என்னும் சங்கப் புலவரும், 'மல்குசுனை உலர்ந்த நல்கூர் சுரம் முதல் குமரி வாகை' எனச்சுரத்தில் -பாலை நிலத்தில் வாகை உள்ளதைக் குறித்துள்ளார். இங்கு சுனை என்றது குறிஞ்சி திரிந்த நிலையைக் குறிப்பது. 1 முணி : 6 : 81 - 89, 2 குறுந் : 341 : 1, 2,