பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


308 குடவாயிற் கீரத்தனார் "அத்த வாகை” என்றார். "அத்தம்' என்பது பாலை நிலப்பாதை. எனவே பாலை நிலத்துள்ள வாகை என்ருகும். இவை யாவற்றாலும் வாகை பாலை நிலத்து மரம். எனவே, வாகைப் பூ பாலை நிலப் பூ. வாகை பாலை நில மரமாயினும் இக்காலத்தில் எங்கும் காணப்படுகின்றது. இலக்கியங்கள் காட்டும் ஒர் அடையாளம் அதன் காய் பற்றியது. இதன் காய் முற்றிய நெற்று. பட்டை யாகவும் சற்று நீண்டும் தோற்றமளிக்கும். சடைசடையாகக் காய்க்கும் கற்றின்போது இந்நெற்றுக்களின் உள்ளிடான விதைகள் கலகல வென ஒலிக்கும் என்பதை, "அத்த வாகை அமலை வான் நெற்று அரியார் சிலம்பின் அரிசி ஆர்க்கும்' -எனக் குடவாயில் கீரத்தனார் பாடினார். பரல்கள் இடப்பட்ட சிலம்பில் இனிய ஒலியாக இதனைக் கண்டுள்ளார் அவர். இவ்வடையாளத் துடன் இன்றும் வாகையைக் காண்கின்றோம். நாட்டு வழக்கில் ஒரு பழமொழி உலவுகின்றது. "மடையானில் குஞ்சையும் வாகை வில் பிஞ்சையும் பார்க்க முடியாது" என்பர். மேற்கண்ட நெற்று டைய வாகையில் இவ்வடையாளத்தையும் காண முடிகின்றது. ஏன் பிஞ்சைக் காணமுடியாது? இதன் அரும்புகள் கொத்தாக இருக்கும். ப்யறுபோல் பசுமையாக இருக்கும். இம் மொக்கின் உச்சிப் பகுதியை நகத்தால் அழுத்தி இழுத்தால் பட்டுநூல் போல நீண்ட மயரிழைகள் நீளும். இவையே அதன் அக இதழ்கள். இதுபோன்றேதான் நள்ளிர வில் இதன் பிஞ்சு தோன்றி சில நாழிகைகளில் வளர்ந்து காயாகி விடுகின்றது. மாலையில் பூங்கொத்தில் அடையாளமும் காட்டாத பிஞ்சு, காலையில் காயாகத் தோன்றுவதால் மேற்சொல்லப்பட்ட பழமொழி எழுந்துள்ளது. பட்டையான நெற்றும் காண இயலாத பிஞ்சும் கொண்ட வாகையின் பூ மங்கலான வெண்மை நிறங் கொண்டது. மலரும்போது அதன் மயிரிழைகளின் மேல் முனை சற்று பசுமை நிறங் காட்டும். அலர்ச்சியின்போது பட்டின் வெண்மை பளபளக்கும். - HSAASAASAASAASAAAS 1 அலுந் 391, 2,