பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
313


ஆனால், முன்னே கண்ட வெண்மை நிறம் பொருந்துவதன்று. இவர்களினும் குறிப்பிடத் தக்க புலவராம் கபிலர் கூறும் உவமை ஒன்று மேலும் தடையை வலுப்படுத்துகின்றது. பெரும்புலவர் என்பதால் ஏறும் வலிமை மட்டுமன்று; புறத்தினைத் தொடர்பில் வரலாற்றுக் குறிப்புடன் வெளிப்பட்டிருப்பதும் காரணமாகின்றது கபிலர் முல்லைக்குத் தேர் ஈந்த பாரியின் உயிர் நண்பர். ஒரு நாள் முல்லையில் கவனங்கொண்டார். பூத்த முல்லையை வண்டுகள் சூழ்ந்து மொய்த்துள்ளன. இக்காட்சியில் மனம்பதித்த அவரது உள்ளம் ஒர் உவமை சொல்ல முந்தியது. புற நிகழ்ச்சி ஒன்று அவரது உள்ளத்தில் நிழலாடியது. வெற்றிபெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதனாம் சேர மன்னனது போர் வீரர் பனந் தோட்டில் வாகைப் பூவைத் தொடுத்து முடித்துள்ள காட்சி அது. அதனை உவமையாக்கி, . போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்ப பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை” - எனப் பாடினார் இங்கு பனந்தோடு மடக்கி முடிச்சிட்ட நிலையில் முல்லைப் பூப் போன்றுள்ளது. வாகைப் பூ முல்லையை மொய்க்கும் புதல் சூழ் பறவை எனப்பட்டது பொதுவில் வண்டினத்தைக் குறிக்கும். வண்டினத்தில் சுரும்பு ஒன்று. அஃது இறகை விரித்துப்பறக்கும் நிலையில் இறகின் உள்நிறத்தால் ஓரளவான செம்மை தோன்றும் இவ்வாறு வண்டிற்குச் செந்நிறம் கூறப்படுவது உண்டு. "செல்லாவாம் செம்பொறி வண்டினம்’’2 -என நாலடியார் செம்புள்ளிகளைக் குறிக்கின்றது. எனவே, கபிலர்தம் உவமை கொண்டு வாகைப் பூவின் நிறம் செந் நீலம் என்று கொள்ள வேண்டும். மயிற்கொண்டை உவமை, சுரும்பின் உவமை இவற்றால் மட்டு மன்றிக் கபிலர் வண்ணித்துள்ள 'துய் வி”யும் வாகையின் அடையாளங்காட்டுவது. பெரும்புலவராகிய கபிலர்- பூக்களின் தொகுப்பிற்கெனக் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடத்தக்க இடம் அமைத்த கபிலர் கருத்தை ஒதுக்கிவிடுதல் அறியாமையாகும். அஃது ஆய்தற்குரியது. ஏதேனும் உண்மை அதில் பொதிந் திருக்கும். ,283:2: நாலடி 2 .16-س66:14 : فنتون. 1