பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

ဂ္ယီဒ္ဒါ ၌ கபிலரும் பிற இருவரும் குறித்திருக்கின்றவாறு பின்னதாகிய கருவாகையாம் தூங்கு மூஞ்சியின் பூவைக் கொள்ளலாம். பள பளக்கும் செந்நீலத்துடன் விளங்கும் இதனையும் போரின்போது சூடியிருப்பர் என்று கருத இடமுண்டாகின்றது. மங்கலான வெண்மையினும் செந்நீலம் கவர்ச்சியுடைய தாகையால் இதனையும் வெற்றிச்சின்ன வாகையாகச் சூடியிருப்பர் “சுடர்வீ” என்பதும் இதற்குப் பொருந்தும். எனவே, வாகைப் பூவில் இருவண்ண வகைகள் உள்ளன: ஒன்று மங்கலான பளபளக்கும் வெள்ளை; மற்றொன்று பளபளக்கும் செந்நீலம், இரண்டும் வெற்றிக்காகச் சூடப்பட்டன. - எ ன் னும் முடிவைக் கொள்ள நேர்கின்றது. இவ்விரண்டு வகையையும் கபிலர், பாணர், காப்பியனார், சேந்தனார், கேசவனார் முதலிய முதிர்காலப் புலவர்கள் பாடியுள் ளனர். இவர்களது வண்ணனைகளில், 'கோலுடை நறு வி’ 'வாகை ஒண் பூ’ "சுடர் வி வாகை" 'துய் வி வாகை" "மென் பூ வாகை -எனப்பட்டவை கொண்டு இப் பூ திரண்ட காம்பை உடையது; ஒளியுள்ளது; பளப்பளப்பாகச் சுடர் ೧.5); பஞ்சுபோன்ற இழைகளைக் கொண்டது; மென்மையானது எனுந் தன்மைகளைப் பெற்றதாகின்றது. இன்றும் இருவகை வாகையிலும் இத்தன்மைகளைக் காண்கின்றோம். வாகை மரத்தைக் 'குமரி வாகை' என்றும், "கடவுள் வாகை' என்றும் "அத்தவாகை' என்றும் காண்கின்றோம். இளமையான மரமாக முதன்முதலில் பூக்கும் வாகை குமரி வாகை எனப்பட்டது. இப்பருவ மரத்தின் மலர் எழில் கொண்ட தாகும். இச்சிறப்பை 'குமரி என்னும் அடைமொழி குறிக் கின்றது.