பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்முடி மலர்கள்


முடி மலர்கள் முன்று

ஆர், வேம்பு, பனை.

தார் - சின்னப் பெயர்

'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும் 1 -என மும்மைகளை அடுக்கியுள்ளது திருவள்ளுவமாலைப் பாடல் ஒன்று. இவ்வடுக்கில் மும்மலர்' தொடுக்கப்படவில்லை. இவ்வடுக்கில் உள்ளவை முடிமன்னர் மூவேந்தர்க்குரியவை. ஆயினும், இவற்றில் எந்த ஒன்றும் அவர் தம் முடிமேல் இடம்பெறவில்லை. பார்வேந்தர் முடியில் தொடுக்கும் மும்மலரைப் பாட்டின் அடியில் தொடுக்க வேண்டாம் எனக் கரு தினரோ என்னவோ? அதற்கென்று சொல்லாமலே விட்டு விடுவரோ?

முடிமேல் இடம் பெறுதற்கு உரிய மும்மலரை மாலையாக் கினார். அதிலும் பொருத்தமாக 'முப்பால்’ என்னும் தாராகத் தொடுத்தார் : 1. திரு. மா : சீத்தலைச் சாத்தனார் பாடலெனப்படும்.