பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321


"வேந்திடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ் போந்தை ஆரே வேம்பென வருஉம் மாபெருந் தானை மலைந்த பூவும்' இவ்வீரர் இன்ன அரசரைச் சேர்ந்தவர் என்று வேறுபாடு தெரிந்துகொள்ள வீரர் சூடுவர். போரின்போதும் சூடுவர். போர்வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும் சூடுவர். வெற்றி என்பது சொற்போர் முதலிய எவ்வகைப் போர் வெற்றியாக இருப்பினும் உரிய பூவைச் சூடி அரசன் வென்றதாகவே காட்டிக் கொண்டு ஆடிக் களிப்பர். இதனை, 'படைத்தலைவர் தம்முள் மாறாய் (பலவகைப் போரில் மாறுபட்டு) வென்று ஆடுங்கால் இன்ன அரசர் படை யாளர் வென்றார் என்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர்” -என நச்சினார்க்கினியர் விளக்கினார். எனவே இம் மும்முடிப் பூக்கள் அரசர்க்கு உரிமைப் பூக்களாகி அவர்வழி வீரர்க்கும் உரியவாயின, - தகுதி என்ன முடிமன்னர் குடிகளின் சின்னமாகக் கொள்ளப்பட்ட இம் மலர்கள் எச்சிறப்பு கருதித் தேர்ந்துகொள்ளப்பட்டன? பூவின் அளவில் நோக்குங்கால் எத்தனிச் சிறப்பும் புலப் பட வில்லை. இவை மூன்றுமே, பளிச்சிடும் நிறமுடையன அல்ல; மணத்திற் சிறந்தன அல்ல; அளவிற் பெரியன அல்ல; மிகச் சிறியன: இவற்றிலும் பனம் பூ காட்சிதருவதும் அன்று; பூவும் சூடப்படவில்லை; தோற்றப் பொலிவு உடையனவும் அல்ல. பின் எது கருதி கொள்ளப்பட்டன? 1 தொல் : பொருள் : 60 : -ே5 2 தொல் : பொருள் : 60 : 3-5 உரை 米2i