பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327


தற்கு அமைந்த அடைமொழிகூட செய்யுளின் எதுகை கருதி அமைந்ததேயாகும். சொற்களை இடமறிந்து அமைப்பதில் சேக்கிழார் கவனங்கொள்பவர். சிவபெருமான் வாய்மொழியில் "திரு இல்லாமல் 'ஆத்தி' என்று அமைத்தார். தம் வாய்மொழியில் 'திரு சேர்த்துத் திருவாத்தி என்றார். அடுத்துச் சிறுத்தொண் டரது மனைவியார் வாய்மொழியிலும் 'கடிசேர் திருவாத்தியின்கீழ் இருந்தார்' என்று அமைத்தார். கடவுளர்தாமே திரு அமைத்துச் சொல்லாமையையும், வழிபாடுடையார் திரு சேர்த்துத்சொல்வதை யும் அமைத்த நயம் ஒருபுறமிருக்க மற்றொரு குறிப்பும் இதன்கண் உள்ளது. - திருச்செங்காட்டாங்குடிக் கோவிலின் திருமரம் காட்டாத்தி. இன்றும் இப்பெயரில் வழங்கப்படுவது, இவ்வூர்ப்பெயரும் 'காட்டான் குடி எனக் காட்டுத் தொடர்புகொண்டது. இத்தொடர் பாலும் காட்டு ‘ஆத்தி யாகும். இந் நினைவுடன் நோக்கினால் முன்னர் திரு அடைமொழியின்றிச் சிவன்வாய் மொழியாகக் குறித் தமை இதன் இயற்பெயரைக் குறிப்பதோடு காட்டாத்தி என்னும் குறிப்பையும் பெறவைக்கின்றது. இக் காட்டாத்தி கோவில் திரு மரம் ஆன நிலையில் 'திருவாத்தி ஆனமையையும் குறிக்கின்றது. சண்டேசர் நிகழ்ச்சி ஆத்தி, திருவாத்தி ஆவதற்குக்காரன மானது போன்று ஆத்திமலர் வழிபாட்டு மலர் ஆனதற்கும் காரண மாயிற்று. இதற்குமுன் இவ்வாத்திமலர் வழிபாட்டிற்குப் பயன்பட வல்லை. அதனால்தான் சண்டேசரும் பக்கத்தில் போய்த் தளிரை யும் பிற மலர்களையும் கொய்து வந்தார். தாம் கடவுள் வடிவம் சமைத்த இடத்தில் இருந்தமையால் இதன் மலரைப் பயன்படுத் தினார். இன்றேல் இம்மலர் ஒன்றுகொண்டே வழிபட்டிருக்கலாம். சண்டேசருக்குப் பின்னர் தோன்றிய திருநாவுக்கரையர், திருஞானசம்பந்தர், திருநாவலூரர், மாணிக்கவாசகர் ஆகிய நால் வரில் எவரும் ஆத்தி மலரைச் சிவபெருமானுக்கு உரிய மலராக வைத்துப் பாடினாரல்லர். பல மலர்களையும் சூடியவராகப் பாடும் இவர்கள் ஆத்தியைக் குவித்தாரல்லர் என்பது நோக்கத்தக்கது. சேக்கிழார் முதன்முதலில் ஆத்தியை வழிபாட்டு மலராக இக்கதை ஒன்றில்தான் குறித்தார். அப்பரும் நாவலூராரும் கதையில் மரம் இடம்பெற்ற அளவில் பாடினர். வழிபாட்டு மலராகக் குறித்தாரல்லர். திருநாவுக்கரையர் திருச்சோற்றுத் துறையில் ஆத்திமரம் இடம்பெற்றதைப் பாடினார்.