பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
328


தூது முதலிய பிற்காலச் சிற்றிலக்கியங்கள் சிவபெருமான் ஆத்தி மாலையை அணிந்திருந்ததைக் கூறுகின்றன. பிற்கால அவ்வையார், "ஆத்தி சூடி அமர்ந்த தேவனை' க் காட்டினார். 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய புட்பவிதி என்னும் நூல். 'ஆர் புனை சடையோன்’2 -எனப் பாடியது. இங்கும் அடைமொழி அளவில்தான் ஆன்-ஆத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு வழிபாட்டிற்குரிய மலர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. பொதுவாகக் கோட்டு மலர்களின் பட்டியலில் "தாதகி என்னும் பெயரில் உள்ளது. காட்டாத்தி என்னும் பெயரில் பிள்ளையாருக்குரிய வழிபாட்டு மலராக வைக்கப் பட்டுள்ளது. இந்நூல் வழிபாட்டு மலர்களின் பயன்களாகக் கூறும் பட்டியலில் இடம் வைக்கவில்லை. பாவத்தைத் தீர்க்கும் மலர்களின் பட்டியலில் ஆத்தி இல்லை. போகத்தைத் தரும் மலர்களின் பட்டியலில் ஆத்தி இல்லை இந்நூலாசிரியர் கமலை ஞானப்பிரகாசர் தம் முன்னோர் கடைப்பிடித்த மரபுகளை வைத்தே இவ்விதிகளை அறிவிக்கின்றமையால் இவற்கு முன் கடைப்பிடிக்கப்பட்ட விதிகள் இவை எனக் கொள்ளலாம். கால வழக்குகள் எவ்வாறாயினும் ஆத்தி மலர் சிவபெரு மானுக்கு ஒரு வழிபாட்டு மலரானது உண்மை. இவ்வாறாக ஆர்-ஆத்தி சோழர்தம் குடிப் பூவாய் அவர் தம் முடி மீதும் ஏறிற்று. வழிபாட்டுப் பூவாகச் சிவபெருமான் அடி மீதும், அணிப் பூவாக மார்பிலும், சூடும் பூவாக முடி மீதும் பெற்றது. இடையில் ஒர் ஐயத்தைத் துரண்டும் கருத்தைக் கண்டு விடவேண்டும். ஏழாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த கொங்குவேளிர் தமது பெருங்கதையில் பாலை நில மரங்களின் பெயர்களை அடுக்கி யுள்ளார். அவற்றுள், 1 ஆத்தி ు : ఉLa/* வாழ்த்து : ఓ షో : 541 .