பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
330

'அம்புகொண் டறுத்த ஆர் நார் உரிவையில் செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி' -என, அம்பின் கர்மை கொண்டு ஆத்தி மரத்தில் நார் உரித்துக் கரந்தைக் கண்ணி கட்டியதை விளக்கியுள்ளார். சேலம் மாவட்டத்தின் சிற்றுார்ப் பகுதிகளில் ஆத்தி மரங் கள் உள்ளன. அவற்றைக் காட்டாத்தி என்றே வழங்குகின்றனர். இதன் பட்டைக்கும் கோலுக்கும் இடையில் படிந்த நாரைக் கத்தி முனை கொண்டு உரித்தெடுக்கின்றனர். அந்நாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கின்றனர். மேலும், இந் நாரைக் கொண்டு கயிறு திரித்து ஆடு, மாடுகளைக் கட்டப் பயன்படுத்து கின்றனர். இதற்கு மேலும் குறிப்பிடத்தக்க செய்தி உண்டு. இந்நாரால் சிறு நூல் கயிறுபோன்று திரித்து குழந்தைகளின் இடுப்பில் கட்டுகின்றனர். குஞ்சமாகத் தொங்க விடுகின்றனர். இதனால் குழந்தைகளை நோயும் பேயும் அனுகா என்று நம்பு கின்றனர். இச்செய்தி முன்னே குறிக்கப் பட்டதாகிய ஆத்தி யின் மன வீச்சு, நோய்க்கும் பேய்க்கும் பகை என்பதற்கும் சான்றாகின்றது. திருச்செங்காட்டாங்குடியிலுள்ள காட்டாத்தியிலும் இவ்வாறு உரிக்க முடிகின்றது. இக்கருத்துகொண்டு 'ஆர்' என்னும் குடிப் பூவைத் தரும் மரத்தை அடையாளங் காண முடிகின்றது. இம்மரம், அடிமர அளவில் மிகப்பருத்தது அன்று. எட்டு பத்து அடி நேரே வளர்ந்து மேலே கொடி படர்வதுபோன்று மேல் மட்டமாக எல்லாப் பக்கமும் பரவித் தழைக்கும். கொடியாக அன்றிக் கிளையாகவே பரவும். கிளைகள் திரிந்து முறுக்கியும், முண்டு முடிச் சாகவும் நேர் ஒழுங்கின்றிப் பரவியிருக்கும். இலந்தை இலைகள் அமைப்பில் சற்றுப் பெரியனவாக இரண்டிலைகள் இணைந்தது போன்று கவட்டிலைகளாகத் தோன்றும், அடிமரம் மேற்பட்டையால் கருநிறமாகத் தோன்றும். இதற்கு ஆங்கிலப்பெயர் சூட்டியோரும் Holy Moரy y EEON என தூயமலைக்கருமரம் என்னும் பொருளில்சூட்டினர். துய்மை, திருவாத்தி வழக்கால் கொடுக்கப்பட்ட அடைமொழி. 1 அகம்:269 :11, 12