பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/368

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
332


கொடிகள் பறக்கும் தெருக்களைப் பெற்றிருந்ததையும் அத் தெருக்கள் ஆராவாரத்தோடு திகழ்ந்ததையும் குறிக்கின்றது. ஆர்க்காட்டில் இருந்த சோழர் குல வீர மன்னன் வீர இளைஞரிடம் செல்வாக்கு பெற்றவனாக விளங்கினான். அவன் பெயர் அழிசி. அவனது மகன் பெயர் சேந்தன். இருவர் காலத்திலும் ஆர்க்காடு வளம்பெற்று எழிலோடு விளங்கியது. வனப்பு வாய்ந்த நங்கையரின் எழில் நலத்திற்கு வளமான ஊரை உவமை கூறும் மரபில் இவ்வூரும் உவமையாக்கப்பட்டது ... ... ... ... இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காட் டன்ன இவள் பழிதீர் மாண் நலம்' ! -எனப் பரணர் பாடியுள்ளார். ஒருகாலத்தில் காடாக - சுரமாக - பாலையாக இருந்த நிலம் நாடாக்கப்பட்டு, வளமாக - வயலாக - மருதநிலமாக மாற்றமுற்று ஏற்றம் பெற்றது. கபிலர் இதற்கு, அமர் ஆத்தி 2 -என அடைமொழி கொடுத்தார். இதற்கு நச்சினார்க்கினியர், பொருந்திய ஆத்தி' என்று பொருள் எழுதினார். குடிக்குப்பொருந்திய’ எனப் பொருள் கருதினார் போலும். பிற்கால அவ்வையாரும், "ஆத்தி சூடி அமர்ந்த” என்றார். இங்கு அமர்ந்த என்பதற்கு வேறு பொருளாயினும் கபிலரது அமர் சொல்லமைப்பை நினைவு படுத்துகின்றது. திரு ஆர் ஊர் ஆர் பெயரால் பெயர் பெற்ற மற்றோர் ஊர், ஆர் + ஊர் ,ஆரூர். இது மனுச்சோழன் காலத்தில் சோழர் தலைநகர் نتيج அதற்குமுன் இவ்வூர் பற்றிய வரலாற்றுச் செய்தயில்லை. புதிய தலைநகரைக் கொள்ள வேண்டிய தேர்ந்த சூழ்வில் இப்பகுதி 1 குறு : 258; 6, 1, 8. * குறி : மா ; இ7,