பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333


வளமாக்கப்பட்டோ புதிய ஊராக உருவாக்கப்பட்டோ தலை நகராக்கப்பட்டிருக்கும் சோழர் ஆட்சித் தொடர்பில் அமைந்த இவ்வூர் சோழர்தம் குடிப் பூவால் பெயர் சூட்டப்பெற்றிருக்கும் எனக் கொள்ளல் பொருத்தமானதே. இவ்வாறு, ஆர் என்பதற்கு இங்கே ஆத்தி மலர்ப்பொருள் கொள்ளாமல் திரு நிறைந்த ஊர் என்று நிறைவு எனப் பொருள் கொள்ளல் பொருந்தாது. ஆரூர் தெய்வத் தொடர்பில் 'திரு பெற்றே திருவாரூர் ஆனது. மூலப்பெயர் ஆரூர்' என்பதே. - இப் பூ பின்பணிப் பருவப் பூ. இப்பருவத்தில் பூத்து உதிர்ந்து விடும். பூ அளவில் சிறியதாகையாலும்; ஆண்டு முழுதும் பூக்காததாலும் இயற்கைப் பூவைச் சூடுதல் என்பது எப்போதும் இயலாது. எனவே, பொன் முதலியவற்றால் செய்யப் பட்ட செயற்கைப் பூவே மிகுதியாகக் கொள்ளப்பட்டிருக்கும். ஆர் நிறைந்த சோழர் குடியைத் தொடர்ந்து பாண்டியர் குடி, பெயர்பெற்ற குடியன்றோ? அவர்தம் குடிப் பூவும் புகழ் முடி சூடிய பூவாகும். வேப்பம் பூ கவரிப் பூ “கத்திபோல் இலையிருக்கும்; கவரிபோல் பூ பூக்கும்; தின்னப் பழம் பழுக்கும்; தின்னாத காய் காக்கும் - இது என்ன?” -என்பது ஒரு விடுகதை. வேப்ப மரம் என்பது இதனை விடுவிக்கும் விடை வேம்பு, கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சருக்கரை வேம்பு, சிவனார் வேம்பு எனப் பலவகைப்படும். பொதுவில் வேம்பு என்பது கருவேம்பைக் குறிக்கும்.