பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
336


கண் என்றது மிகப்பொருந்தும். கண் போன்று வடிவமைந்தது இப்பூ. அளவிலும் ஒத்திருக்கும். இவ்வரும்பு ஐந்து இதழ்களாக விரியும், மையத்தில் இதன் இதழ் அளவில் ஒரு மகரம் உயர்ந்திருக்கும். இதழ்கள் வெண்மை நிறமானவை. எனவே. வேப்பம் பூவின் நிறம் வெண்மை. "அத்த வேம்பின் அமலை வான் யூ'T -என இதன் வெண்மை நிறத்தை வான் பூ எனக் காட்டினார் குடவாயிற் கீரத்தனார் இவ் வடியில் 'அமலை என்ற து இதன் பூக்கள் நிறையத் தழைத்திருப்பதைக் குறிக்கும். முன்னே உள்ள, "அத்தம்' என்பது பாலை நிலத்தின் வழியைக் குறிப்பதன்றோ? பிறரும், 'கான வேம்பு’ என்றனர். கொங்கு வேளிர் தமது பெருங்கதையில் பாலை நில மரங்களாக 26 குறித்துள்ளார் இவற்றில் வேம்பு இல்லை என்றாலும், இறுதியில் வாகையும் பிறவும்' என்று முடித்துள்ள பிற என்பதில் வேம்பைக் கொள்ள வைத்துள்ளதாகக் கொள்ள வேண்டும். எனவே, வேம்பு பாலை நிலப் பூ. ஆண்டின் முதற்பவரும் இளவேனிற் பருவம் இப்பருவத் திங்கள்களாகிய சித்திரை வைகாசியில் இப்பூ பூத்துக் குலுங்கும். புத்தாண்டின் தொடக்கத்தில் பூத்துக் குலுங்கும் இதனைப் புது வருவாயின் அறிகுறியாகக் கொண்டனர். புது வருவாயின்-புத் தாண்டின் அறிகுறியாக இதனைச் சூடியும் அணிந்தும் மகிழ்ந் தனர். புத்தாண்டுச் சமையலில் இதன் பூவைச் சேர்த்தனர் இன்றும் இப்பழக்கம் உண்டு. புறப்பணி காரணமாகப் பிரிந்த இல்லத் தலைவன் வந்து சேர நேரவில்லை தலைவி இளவேனில் தூதர்களைக் கண்டு வெம்பினாள். வீட்டு முன்றிலில் வேம்பு பூத்துக் குலுங்கியுள்ளது. ஆண்டின் புது வருவாயை இது அவளுக்கு அறிவித்தது. ஆனால், அவன் வரும் வாயை அறிவிக்கவில்லை. கொய்து சூடாமலும், பறித்து அணியாமலும், சமையலில் சேர்க்காமலும் வேம்பின் பூ வினே கழிகின்றதை அவளால் தாங்க முடியவில்லை குறு 281, 2