பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337


'கருங்கால் வேம்பின் ஒண் பூ, பாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ 1 --5T5ঠr:# கவன்று பேசினாள். இதில் யாணர் என்னும் சொல் புது வருவாயைக் குறிப்பது. இச்சொல் இங்கமைக்கப்பட்டு வேப்பம் பூ புத்தாண்டு புது வருவாயின் அறிகுறி எனக் காட்டி நிற்கின்றது. பூத்துக் குலுங்குவது மட்டுமன்று; மரத்தைவிட்டு நீத்து வீழ்வதும் ஒர் அறிகுறி. இளவேனிற் பருவம் முடிவதன் அறிகுறி. இருவரும் குலாவுவோம்; இளவேனிலில் வந்து விடுவேன்' என்று தேன் ஊறும் சொற்களைப் பெய்து சென்றவன் வந்தானல்லன் இவளும் இளவேனில் முடிவதன் குறிகளைக் காண்கின்றாள். வேப்பம் பூவும் இடையிடையே உதிர்கின்றது. இவள் முணகினாள்: 'வேம்பின் ஒண்பூ உறைப்பத் (உதிர) தேம்படு கிளவியவர் தெளியும் பொழுது' (இளவேனில்) 'தான் வந்தது; அவரோ வாரார்'2 -இவ்வாறு இவள் - முனகுவதற்குச் சொற்களை கொடுத்தவர் ஒதலாந்தையார் என்னும் புலவர். அவர் இப்பாடலை இளவேனில் பத் தில் வைத்தார். இளவேனிலுக்குரிய அறிகுறிகளில் வேப்பப் பூவும் ஒன்றாயிற்று. - இவ்வாற்றால் வேப்பம் பூ இளவேனிற் பருவப் பூ. வேப்பங் குழை இப் பூவைப் பாண்டிய குலத்தவர் தம் குடிப் பூவாகக் கொண்டனர். பூவைக் கண்ணியாகத் தலையிற் சூடினர். தாராக்கி மார்பில் அணிந்தனர். இப்பூவின் சொற்கொண்டே பெயர் வழங்கப்பட்டனர். வேம்பன்' என்றாலே பாண்டியனைக் குறிப்பதாயிற்று. இதனைச் சூடியும் அணிந்தும், "அலர் தார் வேம்பும்" -(சிலம்பு : 2 : 19) 'சினையலர் வேம்பன் (சிலம்பு : 16 : 149) கருஞ்சினை வேம்பின் தெரியலோன் (புறம் : 45 : 2) எனப்பட்டனர் பாண்டியர். 1 குறுத் :24: 1, 2 2 ஐங் 850 :2, 8, 1. 亲 22