பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/374

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
338


முடிமன்னர் இப் பூவைவிட இதன் இலையாம் குழையையே மிகுதியும் சூடினர்; அணிந்தனர்; பயன்படுத்தினர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முதன் முதல் கன்னிப் போருக்குப் புறப்பட்டான். மதுரை ஊரின் வாயிலில் அமைந்த குளத்தில் நீராடினான். பொது மன்றத்து வேம்பின் குழையைச் சூடினான்; புறப்பட்டான். இவ்வீரத் தோற்றத்தை இடைக்குன்றுணர்கிழார் பார்த்தார்; பாடினார்: 'முதுரர் வாயில் பனிக்கயம் மண்ணி (நீராடி) மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து” 1 வெற்றியைத் தேடித் புறப்பட்டான் என்றார். இவரே இவனை, "மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி யன்? - எனப் பிறி: தோர் பொழுதும் பாடினார். ஒண் தளிர் என்றும் "ஒண்குழை' என்றும் வேம்பின் இலைபேசப்படும். பெரும்பகுதி குழை' என்னும் சொல் இதற்குப் பொருந்துவது. இன்றும் வேப்பிலைக் கொத்து கொண்டு அடித்து மந்திரம் சொல்வோர் குழையடித்தல்' என்பர். ஒருவரை வயப்படுத்தக் குழைந்து பேசுவோரைக் குழையடிக்கின் றான்' என்றும் கூறுவர். எனவே, பாண்டியர்தம் குடிப் பூவாக வேம்பு அமைந்து தன் குழையையும் சேர்த்தது. பூங்கொத்தின் அருமை கருதி எக்காலத் தும் கிடைக்கும் குழையை மிகுதியாகக் கொண்டனர். வேப்பிலையைப் பயன்படுத்தியதற்கு முன்னே காணப்பட்ட நோய்த்தடையும் பேய்த்தடையும் ஒரு காரணமாயிற்று. இதனா லேயே இதற்குக் கடிப்பகை' (கடி = நோய், பேய்) என்றொரு பெயர் வழக்கு உண்டாயிற்று. "அரவாய்க் கடிப்பகை, ஐயவிக் கடிப்பகை”* என்றது மணிமேகலையும். போர்ப்புண் பெற்ற வீரன் வீட்டிற்குக் கொணரப் பட்டால் அவனை நோய் மூட்டும் நுண்ணுயிரிகள் தாக்காமலும் பேய் உண்ணாமலும் தடைஏற்படுத்த வீட்டின் முகப்பில் வேப்பி லையைச் செருகினர். 1 պքւն : 79 : 1, 2, 2 புறம்: 76 : 4-8, . så 16ಣಿ : 7 : 73