பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339


பாண்டியன் நெடுஞ்செழியன் போர் முடிந்த நாள் இரவில் புண்பட்டுப் பாசறையில் உள்ள வீரர்களைக் கண்டு ஆறுதல் சொல்லச் சென்றான். படைத்தலைவன் ஒவ்வொருவரையும் காட்ட அழைத்துச் செல்கின்றான். செல்பவன் கையில் வேல் ஒன்றுள்ளது. அதன் தலையுச்சியில் வேப்பிலை செருகப்பட்டுள்ளது. 'வேம்பு தழையாத்த தோன்காழ் எ.:கமொடு முன்னோன் (படைத்தலைவன்) முறைமுறை காட்ட” ப் பாண்டியன் சென்றான். இவ்வாறு கடிப்பகையாக வேலிலும் சூட்டப்பட்டது. இவையெல்லாம் புறத்துறையில் வேம்பு பெற்ற இடம். அகத்துறையிலும் காதல் பேயை ஒட்டும் வேலன் வெறி யாட்டம் போடுவான். அப்போது, 'வேம்பின் வெறிகொள் பாசி லை நிலமொடு சூடி’ 2 த் தோன்றுவான். வீட்டின் முகப்பில் வேப்பிலை செருகப்படுவதையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. இவற்றிற்காக மரத்தில் வேப்பங் குழையைக் கொணர்வதையும், ‘'வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்" 3 -எனப் பாடி னர். குழந் ைதகட்குக் கடிப்பகையாகக், 'கோட்டு இலை வேம்பின் ஏட்டிலை மிடைந்த படலைக் கண்ணி" சூடியதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெறும்பாணாற்றுப்படையில் காட்டினார். இவ்வாறு பல முனைகளிலும் வேப்பங் குழை பயன்படுத்தப் பட்டது. . காவல் மரம் இவ் வேப்ப மரம் பழையன் மாறன் என்னும் பாண்டிய குலத்தவனுக்குக் காவல் மரமாக அமைந்தது. இதனை வெட்டி வீழ்த்திக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் வென்றதை, நெடு : 176 : 177. அகம் ; 138 : 4, 5. புறம்: 298 : 1. பெரும்பான் :59, 60