பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/376

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
340


"பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி' ! எனப் பரணர் பாடினார். - இதன் பெயரால் வேம்பி’ என்றோர் ஊர். முசுண்டை என்னும் குறுநில மன்னன் ஒருவனது ஊர் இது. வளமான ஊரா கையால் மகளிர் எழில் நலத்திற்கு உவமையாகக் கூறப் பட்டுள்ளது. 'பல்வேல் முசுண்டை வேம்பி அன்ன நல்லெழில் இளநல 2 த்'தை நக்கீரனாரே காட்டியுள்ளார் வேம்பத்துரர் என்றோர் ஊர். இவ்வூரில் வாழ்ந்தவர்வேம்பத்துரர்க் குமரனார் என்னும் சங்க காலப்புலவர். வேம்பு சுவையால் கசந்தாலும், குழையாலும் பூவாலும் இனிக்கிறது. தமிழர்தம் மரபுகளிலும் இலக்கியங்களிலும் வாழ்விலும் கைக்கவில்லை. இன்றியமையாத இடம் பெற்றுத் தமிழ் வளர்த்த பாண்டியரது குடிச்சின்னமாக விளங்கியது. இதனால், இதனைத் தமிழ் வளர்த்த சின்னப் பூ என்று சொல்லி மகிழலாம். குருத்து மலர் 山命6顶 பனை ஒரு புல் சேர மன்னரது குடிப் பூவாகப் பனம் பூ கொள்ளப்பட்டது. பனைக்குப் பெண்ணை, போந்தை, தாலம், தாளி, புற்றாளி, புற்பதி என்னும் பெயர்களை நிகண்டுகள் கூறுகின்றன. சூடாமணி நிகண்டு மட்டும் போந்தை' என்னும் பெயரைக் குறிக்கவில்லை. சேந்தன் திவாகரம் போந்தைப் பெயரைக் கூறியதுடன் தனியாக போந்தை இளம் பனை ஆகவும் புகல்வர்” என இளம்பனை என்னும் பொருளைக் குறித்தது. 1. பதிற் : பதிகம் : 5. 2 அகம் : 249 : 9, 10