பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/377

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
341


இப்பெயர்களுள் பனை, போந்தை இரண்டும் தொல் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் பெண்ணை' என்னும் பெயர் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. தாலம் என்பது இரட்டைக் காப்பியங்களில் காணப்படுகின்றது. புற்பதி, தாளி, புற்றாளி ஆகியன மிக அருகிப் பிற்கால நூல் களில் பேசப்படுகின்றன. பனையை மரம் என்று வழங்குகின்றோம். ஆனால், இது மர இனத்தைச் சேர்ந்தது அன்று. செறிந்து உறுதிப்பட்டதை வயிரம் பாய்ந்தது என்பர். உட்பகுதி வயிரத்தை, உள்வயிர்ப்பு என்றும் புறப்பகுதி வயிரத்தைப் புறவயிர்ப்பு' என்றும் குறித்தார் இளம் பூரணர். இவ்வயிரம் காழ்’ எனப்படும்.

புறக்கா ழனவே புல்லெனப் படுமே” எனத் தொல் காப்பியம் வகுத்துள்ளது. இதனால், பனை புல் இனத்தைச் சேர்ந்தது. இதனாலேயே புற்பதி, புற்றாளி' என்னும் பெயர் களைப் பனை பெற்றது. எத்துணை உயரமாக உறுதியாக வளர்ந்தாலும் பனை புல் இனமே.

புல் இனம், புதர் நில இனத்தைச் சேர்ந்தது. எனவே, பனையின் பூ புதர்ப்பூ என்னும் நிலப் பூ ஆகும். பனையில் ஆண், பெண் வகையுண்டு. இரண்டினமும் பூக்கும். ஆண்பனையின் பாளையிலிருந்து கிளைத்த கதிர்கள் நீண்டு திரண்டு தோன்றும். அக்கதிர்களின் புழைகளிலிருந்து சிறு சிறு பூக்கள் தோன்றும். தடித்த புற இதழ்களில் மூன்று அகவிதழ்கள் விரியும். 6 மகரங்கள் நன்கு விரிந்து தோன்றும். யாவும் ஒரு மிளகு அளவில் அமையும். பெண் பனையின் பாளையிலிருந்து பட்டையான புற இதழ் ஒட்டியிருக்கக் கோள வடிவில் அக இதழ் அமையும். போலி மகரங்கள் அமைந்திருக்கும். இவ்வமைப்பு பஞ்சுபோன்று மென்மையானது. இப்பூவே பிஞ்சாகி அஃதாவது நுங்கு ஆகும். இதனைக் கூர்ந்து கண்ட கள்ளிலாத்திரையன் என்பார், 'பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் & 姆 ஆங்கிரும் பெண்னை துங்கு ' - என்றார். இவரைச் செடியியல் அறிஞர் எனலாம். AAAAAASA SAASAASSAAAAAAMMTAMS 1 தொல் : பொருள் : 680 2 குறு :298:2, 8.