பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343


இரண்டாகப் பிளந்ததிலும் வலப்பக்கத்துப் பாதியைச் குடிக் கொண்டனர். இவர் அலர்ந்த ஒலை என்றதுகொண்டு குருத் தோலை மலர்போன்று கருதப்பட்டதை உணரலாம். எனவே, சேரர் சூடிய குடிப் பூ, வெண்மையான நிறத்தில் கூர்மையாகக் குத்திட்டு செருகப்பட்ட பனங்குருத்து; பூ அன்று. இங்கு போந்தை' என்னும் சொல் கவனத்திற்கு உரியது. பனை" என்னும் பெயர் முதற்பெயராகப் பொதுவில் அப்புல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணை’ என்பதும் ஒரு சிறப்புப் பெயராகப் புல்லைக் குறிக்கும் அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. போந்தை' என்னும் சொல்லமைப்பு பொந்து' என்னும் நிலை கொண்டது என்பது கொண்டு நோக்கினால் உள்ளே உறுதியற்ற பனையைக் குறிப்பதாகலாம். ஆனால் பொந்துள்ளவை பல வகைகளாக உள்ளன. பனையை மட்டும் சிறப்பாகக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இச்சொல்லை இலக்கியங்களின் ஆட்சி கொண்டு நோக்கி னால், குடிப் பூவாகச் சூடப்படுவதாக முன்னே கூறிய வலப்பக்கத்து இளம் குருத்தையே குறிக்கின்றது. மேலும், குடிப் பூவாகக் குறிக்கப்படும் இடங்களில் எல்லாம், போந்தை ஆரே வேம்பு’ (தொல் : பொருள் : 60 : 3.) வேம்பும் ஆரும் போந்தையும்’ (புறம் 338 : 6.) போந்தையாம் பூ (பு. வெ. மாலை : 240 : 2) -ானப் போந்தை' என்னும் சொல்லே அமைக்கப்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் காரண விளக்கம் தந்துள்ளார் அதனையும் சொல்லின் மூலத் தொடர்பு கொண்டு, தோடே மடலே என்னும் இச்சூத்திரத்துப் பிறவும் என்றதனால் போந்தை முடித்தாம். அதனிடத்தினின்றும் போந்ததனால் போந்தை என்றார்." -என்று போந்ததனால் போந்தை' என்று பெயர் உண்டானதாகக் காட்டி யுள்ளார். பணம் போந்தை' என்னும் தொடரும் இக்குறிப்புடையது இதுகொண்டும் சேரர் குடிப் பூவாம் பனங்குருத்து போந்தை' என்ற சொல்லைப் பெற்றதாகின்றது. 1 பொருந் : 148 : உரை.