பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345


த்ர்யமாக-உரிமைப் பொருளாகப் பெற்றுள்ளாய்-எனத் தொன்ம்ை மரபாக - முன்னோர் பழக்கமாகக் குறித்துள்ளார். எனவே, போந்தையும் புடையலும் குடிப்பூச் சின்னத்துடன் வீரச் சின்னமாகவும் கொள்ளப்பட்டிருந்தன. இத்துணைக்கும் இக்குருத்து, மலர்அமைப்போ மணமோ சுவையோ அற்றது. இக்குறையையும் காட்டும் கபிலர், வண்டு இசை கடவாத் தன்பணம் போந்தை”1 -என்றார். இருப்பினும் கண்ணிப் பூ நிலையில் போந்தையாகவும் தார்ப் பூ நிலையில் புடையலாகவும் பெயர் பெற்றுள்ள சிறப்பிடம் இதற்கொரு தனித்தகுதியைத் தந்துள்ளது. பணியும் மணலும் பனையிற் குருத்து எல்லாப் பருவத்திலும் தோன்றுவது. பூவோ இரு பனிப்பருவத்திலும் தோன்றும். தனது இனப் பெருக்கத்தை இளவேனிலிலும் வேனிலிலும் உருவாகச் செய்யும். எனவே, பணம் பூ பனிப்பருவப் பூ ஆகும். பனை எங்கும் பரவலாக முளைத்து வளரும். நீர்ப்பிடிப்பு -நீர்ப்பசை இல்லாத வறண்ட பகுதியிலும் வளரும். ஆனால், மணற்பாங்கான நிலம், அதிலும் கடற்கானல் சிறப்பாக உரியது. கருங்கடற்காற்று அடித்து இதன் குருத்தை மாய்க்க, அதனால், 'அணங்கும் கடற்கானல் என்று பாடப்பட்டுள்ளது. மரம் புதையுமாறு கோடைக்காற்று மணலை இதனடியில் குவிக் கும் என்றும், அதனால் உயரமாகத் தோன்றிய இது குட்டை யாகித் தோற்றமளிக்கும் என்றும் பாடப்பட்டுள்ளது. சேரர் நாடு மலைநாடாயினும் மலையின் மேற்குப் புறக் கடற்கரை நெய்தல் நிலமாகும். எனவே, 1. பதிற்று : 70 : 6, 1.