பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/382

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
346


பளம் பூ நெய்தல் நிலப் பூ. சூடுதற்கு உரித்தான போந்தை-குருத்தோலை பிற பூக் களோடு ஒப்பனைக்கும் ஆயிற்று. இதன் மடலில் குவளையை வைத்துப் பின்னினர்: முடைந்தனர் சூடினர். கொன்றை மலரை இணைத்துக் குடுமியில் சூடினர். வெட்சி மலரை இணைத்து கரியிரும் பித்தையில் சூடினர். வாகை மலரை இணைத்துச் வெற்றி கொண்டாடினர். வேப்பம் பூவைக் கொத்தாகச் சேர்த்துச் சுரிந்த குடுமியிற் செருகினர். கடப்பம் பூவை இணைத்துச் சூடினர். ஆநிரைகளை மேய்க்கும் ஆயர் வேங்கைப் பூவை இத்தோட்டில் புனைந்து அணிந்தனர்.

  • கிழித்துக் குறுக நறுக்கி வாகையொடு இடை வைத்துத் தொடுத்த பனங்குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும், வாகை வி அம்முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமம்’ கொண்டதைப் பதிற்றுப் பத்தின் பழைய உரைகாரர் விளக்கினார்.

இவ்வாறெல்லாம் இதனை ஆடவரே சூடினர். இக்காலத் தில் மகளிர் தாழை மடலில் பிற பூக்களை வைத்துத் தைத்துச் சூடுவதுபோன்று அக்கால ஆடவர்க்கு இது விருப்பமாக இருந்துள்ளது. . அனைத்தும் பயன் பூவின் இடத்தைப் பெற்ற இக்குருத்து பலவகையிலும் மக்களது வாழ்வில் பயன்படுத்தப்பட்டது. இருக்க, படுக்க, உறைய, உடுக்க எல்லாம் பயன்பட்டுள்ளது. கோவலனைக் கண்ணகி, . . "தாலப் புல்லின் வால்வெண் தோட்டு'த் - -தடுக்கில் அமரவைத்து "அமுதம் உண்க அடிகள் சங்கு” என்றாள். கோவலன் சமண சமய நோன்பினன். அதனால் 'அடிகளே எனப்பட்டான். அந்நோன்பிக்கு உரிய தூய இருக்கையாகப் பயன்பட்டது. - 1 பதிற் : 66 : 14, 16 உரை 2. சிலம்பு : 16:85,86,