பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/387

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
351


பாடியன யாகப் பாடல்கள் உள்ளன. தத்தம் மன்னர் பெருமை யைப் பேச அவரவர்தம் குடிப் பூவைப் பழித்துப் பாடியது முறை யாகுமா? மதித்துப் போற்றத் தக்க ஒன்றை, மிதித்துத் துாற்றிய பழியையே சாரும். அப்பெரும் புலவர்களோ, அவர்தம் பெயரில் மற்றவர்களோ பாடியிருப்பினும் இது வேண்டாத ஒன்று. .. இவ்வேண்டாத ஒன்றுடன் வேண்டப்படும் செய்திகளும் தென்படாமற் போகவில்லை. நாட்டில் மும்மைப்பாடு; பாட்டில் ஒருமைப்பாடு, பரஞ்சோதி முனிவர் ஒருசேரக் கூடாத அவர்களைப் பாட்டில் கூடவைத்தார். அக்கூட்டிலும் மூன்று மலர்களை முதற் கண் வைத்து, "ஆரொடு மடலவிழ் பனையொடும் அரம்நிகர் இலைநிம்பத் தாரொடு' 1 - மும்முடி மன்னரும் கூடி வந்தால் எப்படி யிருக்குமோ அவ்வாறு பெருகியது வைகை என்றார். இத்துடன், "புலியோடு சிலை(வில்) யொடு தகுகயலொடு' ஒன்றாகக் கூடித்தழுவி வந்தது போன்று இருந்தது என்று பாடினார். அவ்வாறு வரவைத்த மூன்று மன்னர்களையும் எந்தச் சொற்றொடரால் குறித்தார்? "தமிழ்பயில் அரசர்கள்' - என்று மொழி ஒருமைப்பாட்டுத் தொடராக முடித்தார். அவர்க்கு அவ்வாறு ஒரு பேரவா உள்ளத்தே ஊறியது போலும்! சிலப்பதிகாரம் மூன்று முடிமன்னர்க்கும் உரிய நூல். அக் காலத்திலும் முப்பிரிவாகவே இருந்தனர். அதனைக் குறிப்பது போன்று இம்மன்னர் தொடர்பிலேயே அந்நூல் முப்பிரிவாக - மூன்று காண்டங்களாக அமைந்தது. இருப்பினும் இளங்கோவடி lmmi-mm****ൺ... 1 திருவிளை. பு : அன்னக்குழி : 21.