பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
352


கார்க்கு அவர்களை ஒன்றுபடுத்திக் காணும் உள்ளுணர்வு இகந்தது. அவ்வுணர்வை வாழ்த்துக் காதையில் படிப்படியாக வடித் தார். சோமுனைப் புகழ்ந்து அம்மானை வரி பாடினார். அடுத்துப் பாண்டியனைப் புகழ்ந்து கந்துக வரி பாடினார். அடுத்துச் சேரனைப் புகழ்ந்து ஊசல் வரி பாடினார். மேலும் புகழத் தொடர் பவர், வள்ளைப் பாட்டு என்று எடுத்துக் கொண்டு அதிலேயே அடுத்தடுத்து மூவரையும் பாடி நூலைநிறைவேற்றினார். இவ்வாறு நூலின் முடிவில் அமைத்த இவ்வமைப்பு இளங்கோவடிகளாரது ஒருமைப்பாட்டு உணர்வின் வடிப்பு எனலாம். 'இவ்வடிப்பில்,” "... ... ... ... ... ... ...செம்பியன் வம்பலர் தார் பாவை மார் ஆரிக்கும் பாடலே பாடல்’ "வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்" "பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்' - என மும்முடிமலர்களையும் குறித்துப் பாடினார். பாடி நூலை நிறைவு செய்தார். ஒரு பெருங் காப்பியம் இம்முடிப் பூக்களுடன் நிறைவு பெறுதல் நமக்கும் மன நிறைவைத் தருகின்றது. மூன்று பூக்களும் நிறைவடைகின்றன. மலர்களில் அகத்திணை மலர்கள் ஐந்து, புறத்தினை மலர் கள் எட்டு, முடிமன்னர் மலர்கள் மூன்று ஆகியவை தமிழகத்தில் தனிக்குறிப்பிற்குரியவை. இவை, இலக்கணச்சட்டகங்கள்; மரபுவழிக் குறியீடுகள்; நடைமுறைச் சின்னங்கள். அகவாழ்விலும் புறவாழ் விலும் இடம்பெற்றவை; அரசியலில் முடியேறியவை; பதிவானவை. எனவே, இவை வரலாற்றுத் தகுதிபெற்றவை; வழக்காற்றுப் பகுதி கொண்டவை. இவற்றால் இவை வரலாற்று மலர்களும் ஆகும். SAASAASAA 1 சிலம்பு : 29 : 26, 27, 28