பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3


அடிப்படைத்தன்மைகளைத் திருவள்ளுவர், காளிதாசர், சேக்சுபியர் ஆகிய மூவர் வாய்மொழிகளில் உணர்வது ஒரு தனிச் சிறப்பாகும். ஒரு முழுமையான தனிச்சிறப்பு எனலாம். திருக்குறளின் காமத்துப்பால், தலைவன், தலைவி, தோழி உரையாடல்களாக அமைந்தது. இவ்வமைப்பால் இது நாடகத் தமிழ் இலக்கியம். வடமொழியில் சுவையும் நயமும் சுரக்கச் சுரக்க நாடகக்காப்பியங்களைப் புனைந்தவர் மாகவி காளிதாசர். ஆங்கில நாடக இலக்கியத்தின் தனிப்பெருஞ் செம்மல் செழுங்கவிஞர் சேக்சுபியர். உலகத்து இலக்கியங்களின் ஒட்டு மொத்தம் இம் மூவர்தாம் எனலாம். எனவே, பூ, உலக இலக்கியங்களில் தனியோர் இடங்கொண்டு சிறக்கின்றது எனலாம். "இலக்கிய உலகில் பூவின் தனிச்சிறப்பு-என்று குறிக்கும் போது இச்சிறப்பை முந்திக்கொண்டு உலகம் வருகின்றது. வரும் உலகம் தனக்கு முன்னே பூவைச் சூடி நிற்கின்றது. இந்த உலகத்தையே பூவுலகம் என்றுதானே சொல்கின் கிருேம்? பூவுலகை வழிமொழிவது போன்று பிங்கல நிகண்டு, 'பூகோளம், பூகண்டம், பூவலய மென்ப’’4 -என்று பூ-பூ பூவாகவே அடுக்குகின்றது. "மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி'5 -என்று மணிவாசகர் பூதலமாக்குகின்றார். இவற்றிற்கெல்லாம் மேலாகப் பூவே உலகம் ஆகியது. உலகைப் பூவாகவே-பூ என்னும் சொல்கொண்டே தமிழ்ச் சான்ருேர் பாடினர்: - நிலத்திற்குப் பெயர்களை விதிக்கும் சூடாமணி நிகண்டு, "திணையே மாவே வேலி பூ நிலம் நாற்பெயரே' • . -என்கின்றது. 4 பிங், நி: 451 5 திருவா: திருலம்மானே ! 6 சூடிா. நி; இடப்பெயர் : 6