பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/396

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
360


இனி மலரின் தொடர்பில் உண்டான பெயர்களைக் காணலாம். இம்மலரின் இதழ்கள் ஆறு. இவை ஆறும் செவ்வொளி தரும் நிலையில் ஆறு விண்மீன்களின் தொகுப்பாகிய கார்த்திகை போலக் கண்டனர். கார்த்திகைப் பூ என்றனர். இத்துடன் ஆன நான்கு பெயர்களும் வழக்குப் பெயர்களே. மேலும் இஞ்சம்' என்னும் பெயரை அகர முதலிகள் குறிக் கின்றன. அடியார்க்கு நல்லார் 'உச்சிச் செலுந்தி’ என்னும் ஒரு பெயரை உரையில் தந்துள்ளார். - இலக்கியங்களில் குறிக்கப்படும் பெயர்களில் இலாங்கலி - என்பது கலப்பைப் பொருள்தரும் சொல். எனவே, முன்குறித்த படி கொடியைக் குறிப்பதாகும். கோடை' என்பது கோடலின் மரூஉ மொழி. காந்துகம்’ என்பது நிறம் கருதி எழுந்தகற்பனைப் பெயர். இதன் விவரம் பின்னர் காணப்படும். பற்றை என்பது பற்றிப் படர்தலைக் குறிப்பதாகலாம். ஆனால், பற்றிப்படரும் பல இருக்க இஃதொன்றிற்கு மட்டும் இப்பெயர் வருமா என்னும் வினா எழுவதால், இப்பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு கொள்ள வேண்டும். இப் பூ தன் வளர்ச்சியில் நிறம் மாறித் தோன்றுவது. இந்நிற மாற்றங் கரணியமாக இப்பெயர் நேர்ந்திருக்கும். எவ்வாறு? ஒழுக்கம் இல்லாதவன் பற்றையன்' எனப்படுவான். இருமனப் பெண்டாம் பரத்தை பற்றைச்சி' எனப்படுவாள். தகாத பிறவிகள்-தப்பிப் பிறந்தோர் பற்றை எனப்படுவர். நம்மாழ்வார், - 'பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும்பொய் பேசவே 1 够,* 影 - என்று பாடினார். இத்தகையவர் நேரத்திற்கு நேரம் மனம் மாறுவர். இக் காந்தள் மலரும் தன் வளர்ச்சியில் நிறம்மாறித் தோன்றுவதால் இப்பெயரைப்பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு இழிவான பெயரை இடுவார்களோ எனின், பிற்காலத்தார் இப்படியும் செய்வர் என்றே சொல்ல வேண்டும். 'துங்குமூஞ்சி' என்று ஒரு பெயர் வெற்றிப்பூ வாகைக்கு இடப் 1. திருவாய், 8 : 2 : 1.