பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362


'காலங் கருதித் தோன்றி கை குலப்பக் கோடல் வளைந்த வள்ளலர் உகுப்ப’ -என்று கல்லானாரும் தோன்றியையும் கோடலையும் வெவ்வேறாகக் காட்டியுள் ளனர். கபிலரோ, "ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்' -எனத் தம் குறிஞ்சிப் பாட்டின் 62 ஆம் அடியிலும், "கோடல், கைதை,கொங்குமுதிர் நறுவழை" —srāor 83 ஆம் அடியிலும், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி -என 90 ஆம் அடியிலும் காந்தள், கோடல், தோன்றி மூன்றையும் தனித்தனியே வெவ்வேறு மலர்களாகப் பாடியுள்ளார். கபிலரது மதிப்பீடு இலக்கியத்தில் மதிக்கத்தக்கது. கபிலர் பூப்பெயர்களின்சொற்களை மட்டும்தொகுத்தார் என்று சொல்லமுடியாது. பொருளும் வகையும் அறிந்தே தொகுத்துள்ளார். பிறரது ஆட்சிகளையும் கபிலரது ஆட்சியையும் கொண்டு நோக்கினால் மூன்றும் ஓரினத்தின் வெவ் வேறு தன்மையில் அக்காலத்தில் கொள்ளப்பட்டன என்று கொள்ள வேண்டும். குறிப்பிடத்தக்க பல மலர்கள் செம்மை நிறமும் வெண்ை நிறமும் கொண்டு இருவகைகளாக உள்ளன. . கபிலர் குறிஞ்சிப்பாட்டில் இவ்விருவகைகளாக அமையும் மலர்களின் பெயர்களைக் கையாண்டுள்ளமை கவனிக்கத் தக்க தாக உள்ளது. முல்லை என்றால் பொதுவில் வெண்மை முல்லை யைக் குறிக்குமாதலால் முல்லை என்று அடைமொழியின்றிக் குறித்தார். செம் முல்லையைத் தளவம்’ என்னும் சொல்லால் குறித்தார். இதுபோன்றே ஆம்பல் என்றும், குவளை என்றும் இரண்டாகக் குறித்தார். தாமரையில் வகைகளைத் தனித்தனியே குறிக்காமல் 'முட்டாட்டாமரை எனப்பொதுப் பெயரைக்குறித்தார். ஆனால், காந்தளைக் காந்தள், கோடல், தோன்றி என இரு நிற வகைகளுடன் பொதுக் காந்தளையும் தனியாகக்கொண்டு மூன்றாகக் குறித்துள்ளார். இதுகொண்டும் பிற சங்கப் புலவர் 1. శ. 29 ; 7, 11.