பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/404

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
368


இத்துடுப்புடன் கோடலின் அரும்பு முனை சிவப்பாகத் தோன்றும். இது காற்றில் அடிபட்டு அசைந்து தடுமாறுவதைக் கண்ட நல்லந்துவனார், கள்ளைக் குடித்தவன் தடுமாறுவது போன்றுள்ளதாக, x 'கரிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்பு" -எனப்பாடி அதன் முனையில் அமைத்த சிவப்பை உன்னி அத்துடுப்பு தீக்கடைக்கோலுடன் தீப்பொறியைப் பெற்றிருப்பதாக, 'ருெவியுடன் (தீக்கடைகோலுடன்) திரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் 1 -என்று நிறைவு செய்தார். இத்துடுப்புடன் அரும்பு தலைசாய்த்து முகையாகும் நிலை யில் பாம்பு ஒன்று தலை நீட்டி இருப்பதுபோன்று கருதுமாறு இருந்ததைக் கண்ணன் சேந்தனார், - 'கோடல் அம் கூர்முகை கோள் அரா நேர் கருத'2 -என்றார். இம்முகை போதாகி மலராகிறது. இதழ்கள் வெளிவளை வாகப் புடைத்து நிற்பது புல்லாலங்கண்ணியார் பார்வையில் சினங்கொண்ட பாம்பு தன் படத்தை விரித்திருப்பதாகப் பட, "வெஞ்சி ைஅரவின் பை அணந்தன்ன (விரித்ததுபோன்று) தண்கமழ் கோடல் தாது பிணி அவிழ' என்றார். இதனை வழி மொழிபவர்போன்று மதுரைக் கண்ணங்கூத்தனார். "அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்’’4 -என்றார். நன்கு மலர்ந்து நிற்கும் நிலையில் கோடல் தன் அழகிய இதழ்களில் முக்கால் பகுதி வெண்மை நிறமும் முனை செம்மை யுமாகக் காட்சி தரும். இந்நிலையில் தான் இது தன் வெண்மை நிறத்தில் நின்று, 1. கலி :101; 8, 4. 2 திணை ஐ : 29, 3 அகம் : 1.54 : 6, 7, 4. தார்; நா :11.