பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/408

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
372


இப்பூவைத் தனியாகச் சூடியதோடு பிற பூக்களோடும் இணைத்துச் சூடியதை, கோடல் எதிர்முகைப் பகவீ முல்லை நாறிதழ்க் குவளையொடு இடைப்பட விரை இ ஐதுதொடை மாண்ட கோதை’ . - என்னும் சிறைக்குடி ஆந்தை யார் பாடல் குறிக்கின்றது. வெண்மையும் முனை செம்மையும் கொண்ட இது முழுதும் வெண்மை கொண்ட முல்லைக்கு எதிர் வீ ஆகியது. இதன் எழில் கருதி இரண்டு பூக்களின் இட்ை இடையே வைத் துத் தொடையாக்கப்பட்டு அது வளைக்கப்பட்டுக் கோதையாகச் சூடப்பட்டுள்ளது. ஐது தொடை மாண்ட கோதை' என்பதால் இக்கோதை அழகியதாகவும் பெருமைக்குரியதாகவும் கருதப்பட்டதை உணரலாம். மாந்தர்க்கேயன்றிக் கடவுளர்க்கும் சூட்டும் பூவாகியது. - . 'கோடல் கூவிள மாலை மத்தமும் செஞ்சடைக் குலாவி" ச் 2 சிவன் விளங்கியதை ஞானசம்பந்தர் காட்டினார். முருகனும், 'கோடலும் மராத் தொடு குரவும் செச்சையும் اg U( ιρη"3 ஜீத் கு னாக விளங்கினான். தலையிற் சூடப்பெற்ற இப் பூ ஊர்ப் பெயராகவும் சூட்டப் பெற்றது. மலைஞாலத்தில் கோடற்பள்ளி என்றொரு ஊர் உளது. இவ்வாற்றால், கோடற் பூ - காந்தளின் பொது அமைப்புடையது; கிழிலிருந்து விரிந்து குடையளவாக மலர்வது; அதன்பின் மலராகவும் இதழாகவும் உதிர்வது, இதழ் ஒவ்வொன்றும் கீழிலிருந்து பெரும்பகுதி வெண்மை நிறங்கொண்டு முனை சிவந்திருப்பது. மாந்தர் சூடும் பூ, கடவுளர்க்குச் சூட்டும் பூ - ஆகின் இது: - 1 குறு : 32 : 1 - 8. 2 ஞான தே திரு.அரசிலி : 1 , 2, . 3. சத், பு : திருவிளை : 89,