பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
372


இதுபோன்று தோன்றிப் பூவும் தனித்துக் காணத் தக்கது. தோன்றி. சொல்லில் தோன்றி. с தோன்றி என்னும் சொல்லும் பலபொருள் ஒருசொல். தோன்றிக் காட்டுதலைக் கொண்டது என்பது இதற்கொரு பொருள். புதர்களின் இடையே பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் பூத்துத் தோன்றுவது இப்பெயர்க்கு ஒரு வெளிப்படை யான கரணியமாயிற்று. இதுகொண்டே மலைஞாலத்தார் இதனை 'மேந்தோன்றிப் பூ-மேந்தோன்னிப் பூ' என்கின்றனர். ஆண்டாள் இத்தோன்றியைப் பார்த்தாள். இதன் செம்மைச் சுடர் திருமாலின் கையிலுள்ள ஆழி சுடர்விடுவது போன்று தோன்றிற்று அவளுக்கு. காதல் கொப்பளிப்பால் அவள் உள்ளத் தை இம்மலர் அவ்வழியாகச் சுடுவது போன்றிருந்ததாம். நீ இவ்வாறு சுடாதே’ என்று பாடத் துவங்கியவள், "மேற்றோன்றிப் பூக்காள்' - என்று அழைத்தாள். இவ்வாறு அவளால் இலக்கியத்திலும் 'மேல் தோன்றி'யாக இடம் பெற்றது. இவ்வாறு, மேல் தோன்றி என்பதன் கரணியம் மேலே காட்சியளிப்பது மட்டுமன்று; இதன் மலர்ச்சிச் செயலை நோக்கி இதன் உட்பொருளை உணரவேண்டும். - - - - - முன்னர் கோடல் மலர்ச்சியின் வளர்ச்சியில் அது குடை அளவோடு நின்றுவிடுகின்றது. இத்தோன்றி அதுபோன்றே சிவந்த நிறத்தில் கீழிருந்து குடையளவிலும் மலர்ந்து மேலும் மேல்நோக்கித் தோன்றி வளர்வது. இந்த மேல்நோக்கிய வளர்ச் சிக்குப் பின்னரே இதன்தோற்றம் பளிச்சிட்டுத் தோன்றுவது. எனவேதான் இதற்கு மேல் தோன்றி என்னும் பெயர் அமைந்தது. இஃது அதன் மலர்ச்சிச் செயலால் நேர்ந்த பெயர். 1 சங், செ : பக்கம் : 74 பி. எல். சாமி, 2 நாச்சி, திரு 10 2.