பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

- தெறித்த துண்டுத் தீப்பிழம்பு சூழ்நிலையால், மேற்பகுதி ஆவிப் பிழம்பாகிக் காற்றுச்சூழலால் நீர் தோன்றிற்று என்பது நிலநூலார் கோட்பாடு.வானம், நெருப்பு, காற்று, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் நிலத்திற்கு முந்தியது நீர்' என்பது பூத நூலார் முடிவு. நீர் நிலத்திற்கு முன்னே தோன்றியது என்னும் கருத்தை வைத்தே கடலுக்கு "முன்னீர்"என்னும் தமிழ்ச்சொல்லை அமைத்தனர் சான்ருேர், இதனைப் புறப்பாட்டிற்கு உரை வகுத்த பழைய உரைச் சான்ருேரர், "முன்னீர் என்று ஓதி நிலத்திற்கு முன்குகிய நீர் என்றும் உரைப்ப' ! -என உரைத்தார். நீர் வெள்ளத்தில் மலைகள் தோன்றின. மலையில்தான் உயிர்கள் தோன்றிப் பல்கிப் பெருகின என்பது உயிர்நூலார் கல்லெழுத்து. இதனைத்தான் 'கல்தோன்றிய காலம் கால வரலாற்று நூலார் காலக் கல் நாட்டினர். நீரில் கற்பாறை எழுந்த-தோன்றிய பாங்கைக் கூர்ந்து நோக்கிளுல் அது பூவின் பாங்காக அமையும். நீர்ப்பரப்பில் கற் பாறையின் முனை, அலைமோதல்களின் இடையே கண்டும் காணாததுமாகத் தோன்றியது. நீர் நனைப்போடு தோன்றிய அம்முனை, பூவின் முளைப் பருவமாகிய நனை போன்றது. தொடர்ந்து எழுந்து கூர்மையாக நின்றதோற்றம் பூவின் அரும்புக் காட்சியை வழங்கியது. மேலும் அடி பருத்து எழுந்த காட்சி அரும்பின் அடிமுகிழ்த்துத் தோன்றும் முகை போன்றது. முகுமுகு' என முகிழ்த்த உச்சி, முகடு எனப்பட்டது. முனை கூர் இன்றி மொக்கையாகத் தோன்றியபாறை மொக்குள் போன்று அமைத்தது. மொக்குள் முகையின் ஒருவகை. "முகை மொக்குள் 12 என்பது குறள். இம்மொக்குள் போன்றிருப்பதால் நீரில் தோன் றும் குமிழியும் நீர் மொக்குள்’ எனப்பட்டது. - 11 புறம் : 9 உரைவிளக்கம் 12 குறள்: 1274