பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378


இவ்வாறு வண்ணக் கோலத்துடன் எழில்மிக்கு மணமும் கமழ்வதாயினும் தோன்றியைச் சூடியதாகத் தெரியவில்லை. இருப் பினும் குறிஞ்சிப்பாட்டில் சூடும் பூக்களோடு தொகுக்கப்பட்டிருப் பதால் சூடும் பூவாகக் கொள்ளவேண்டும். சூடப்பட்ட தலை தெரியாது போயினும் பெயர் சூட்டப் பட்ட மலை தெரிகின்றது. ஒரு மலைக்குத் தோன்றி” என்று பெயர். கருவூர்க்கு மேற்கில் மூன்று கல்லில் உள்ள ஒரு சிறு , தான்றோன்றி மலை எனப்படுகின்றது. இத்தோன்றி மலைக்கு உரியவனாக ஒரு குறுநிலத் தலைவன் ஆண்டான். அவனை, "இழுமென இழிதரும் அருவி வான்தோய் உயர்சிமையத் தோன்றிக் கோவே' -என ஐயூர் முடவனார் பாடினார். தோன்றிப் பூ மலைப்பெயரில் ஏறி, மன்னன் பெயரிலும் ஊர்ந்தது. இவ்வாற்றால், தோன்றிப் பூ, காந்தளின் பொது அமைப்புடையது. கீழிருந்து விரிந்து குடையளவாகி அதற்கு மேலும் மேற்றோன்றியாக மலர்வது. மஞ்சள், கிச்சிலி, செம்மை நிறங்களில் விளங்கி இறுதியில் குருதிச்சிவப்பாகும் செம்பூ. மனங்கொண்டது. - பெருமளவில் சூடப்படாதது. துடுப்பில்லை; நெருப்பில்லை. இங்கு கோடலுக்கும் தோன்றிக்கும் கூறப்பட்ட அடை மொழிகளைக் கொண்டு இரண்டின் வேறுபாட்டையும் அறிதல் வேண்டும். நிறத்தால் வேறுபட்டவை நிற்க, புறம் 899 : 88, 84,