பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379


கோடலின் காம்பு துடுப்பு எனப்பட்டது; தோன்றியின் காம்பு அச்சொல்லால் குறிக்கப்படவில்லை. கோடலுக்குப் பாம்பு உவமை கூறப்பட்டது: தோன்றிக்குக் கூறப்படவில்லை. கோடல் குடைப் பூவாகப் பாடப்பட்டது; தோன்றி பாதி மலர்ச்சியில் அது போன்றிருந்தும் குடைப் பூவாகப் பாடப்படவில்லை. கோடல் உடைந்த வளையலாக உதிர்வது சுட்டப்பட்டது; தோன்றி அவ்வாறு சுட்டப்படவில்லை. இவை நிற்க, தோன்றி மேல் தோன்றியாகக் காட்டப்பட்டது; கோடல் மேல் மலர்ச்சியாகக் காட்டப்படவில்லை. தோன்றி புதரில் பூப்பதாகக் கண்டோம். கோடல் அவ்வாறு காணப்படவில்லை. х தோன்றி தோன்றுதல் என்னும்சொல்லால் குறிக்கப்பட்டது. கோடலுக்கு அச்சொல் அமைக்கப்படவில்லை. இவை யாவுங் கொண்டு இரண்டையும் தணித்தனியே அடையாளங் கண்டுகொள்ள முடியும். மற்ற வகையில் இரண்டும் ஒரே தோற்றத்தவை. சுருக்கமாகச் சொன்னால், இம்மலரில் வெண்மை நிறங்கொண்டது கோடல். செம்மை நிறங்கொண்டது தோன்றி. ஒரு தனித்தகுதியுடன் பொதுப் பெயரும் ஆவது காந்தள். இவ்வாறு மூன்றாகக் காணும்போதும் காந்தள் என்பது பொதுப் பெயராகத்தானே உள்ளது? அவ்வாறிருக்க அதனை ஒரு தனியாகக் கபிலர் பாடியது ಫ್ಲ? பிறரும் மற்றவற்றிற்கு வேறுபாடு காட்டியதேன்? Tತ್ಗುಣಿನ್ದು காநதள தனி ஒன்றாகி இப் பூ மூன்று வகையாகும்? @ಠಿಣTT55ಕ್ಸ್ எழுகின்றன. இதற்குக் குறிப்பாக விடை வைக்கும் 1ಣಹàನ್ಸಿಸ್ಟFr மேலே ெேபாதுப் பெயர் என்று மட்டும் எழுதாது ஒரு தனித் தகுதியுடன் பொதுப் பெயர் எனப்பட்டது. அத்தனித் தகுதி எது? ஆத்தகுதியைக் காணக் கரந்தட் சொல்லையும், அதன் விளைநிலத்தையும் ಹTಣT வேண்டும்.