பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
381


'மலை' என்னும் சொல்லை மேலும் அடைமொழியாகவைத்து 'மலையில் பூக்கும் செங்காந்தள்' என்று ஒரு குறிப்பைக் காட்டு கின்றது. இவ்வோரிடம் மட்டு மன்று, "ஒண்செங்காந்தள் வாழையஞ் சிலம்பு' (நற் : 175 : 6, 7) "ஒண்செங்காந்தள் கல்மிசைக் கவியும்" (குறு : 185 6,7) "துறுகல் மீமிசை ஒண்செங்காந்தள்' (குறுந் : 284 : 2, 3) -என்றெல்லாம் மலைத் தொடர்புடனே செங்காந்தள் சொல்ல மைப்பு உள்ளது. எனவே, செங்காந்தள்’ என்னும் பண்புத்தொகைத் தொடர் காந்தளுக்குரியதாக அமைந்துள்ளது. இதன் தொடர்பிலேயே அதன் தனித் தகுதி முளைக்கின்றது என்ன அது? மலைக் காந்தள் காந்தள் பூ மலைப் பாங்கில், விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தள்"ா -என்றபடி மலையின் தலை உச்சியிலும், "நெடுவரை மிசைஇய காந்தள்"2 "நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்'3 -என்றபடி மலையின் உடற்பகுதியிலும், "... . நறுங்கார் அடுக்கத்துப் போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்'க -என்றபடி பக்க மலைகளிலும், காந்தட் கொழுமடல் புதுப் பூ'ஊதுந்தும்பி நன்னிறம் மருளும் அருவிடர்' குறி பா : 196. பொருத் 8.8 ஐங்: 226 அகம் : 288 :15, 16. அகம் : 188 - 17, 19.