பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
382


"... , ... விடர்மூகை சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்'T -என்றபடி மலைப்பிளவுகளிலும், 'கடிகனைக் கவினிய காந்தள்'2 -என்றபடி மலைச்சுனை ஒரங்களிலுமாக மலையின் அனைத்துப் பகுதிகளிலும் பூப்பது, பெருமலைகளில் மட்டுமன்றி, - "... ... உறந்தைக் குணா.அது நெடும்பெரும் குன்றத் தமர்ந்த காந்தள்'3 -என்றபடி திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் பூக்கும், பூத்து மலை யெல்லாம் மனங் கமழ்ந்து சிலம்பு கமழ் காந்தள்' (ஐங் : 293) எனப்பட்டது. மலையிடமெல்லாம் கமழ்வதால் வண்டுகள் மலை மேல் படையெடுத்துச் சென்று மொய்க்கும். இதனால் மலைக்கே ஒரு பெருமை போன்றும், காந்தள் மலர்ந்தாலே வண்டுகள் படையெடுக்கும் என்பது போன்றும் நாலடியார், 'கல்லோங்கு உயர்வரை காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்’4 -என்று நயம்படப் பாடியது. - இவ்வாறாகச் சிறப்பிக்கப்படும் அளவில் காந்தள் மலையில் தோன்றி, மலைக்கு மணம் பரப்பி, எழில் ஊட்டி, மலைநாட்டு மக்களைக் கவர்ந்து, அனைத்து நிலப் புலவர் பெருமக்களையும் ஈர்த்தது. நந்தமிழ் நாட்டில் மலைசெறிந்த பகுதி பழந்தமிழ்ச் சேரநாடாம் இன்றைய மலைஞாலம் அன்றோ? இம்மலைஞாலத் தில் காந்தள் பல்கிப் படர்ந்து மேம்பட்டுத் திகழ்வதால் இதற்கு ஆங்கிலத்தில் மலைநாட்டுப் பெருமிதத் தூய மலர்' என்னும் Qurghofsi, ‘MALABAR GLORY LILLY' grgro, Guuffi'l-surff. காந்தள் பெயரில் இவ்வாறு மலைப்பூவாக நிறையப் பூப்ப தால் அம்மலைப்பகுதிகள் "காந்தளம் சிலம்பு’ (பெரும்பாண்:372) எனக் காந்தள் அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது. 1 குறு : 239 - 2 2. கவி : 45 : 2 8 அகம் : 4 : 14, 15 * தாலடி : 283