பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
383


மேலே காட்டப்பட்ட அடிகளைக் கவனித்தால் மலையின் அடிப்படையோடு குறிக்கப்படும் இம்மலர் காந்தள் என்னும் சொல்லைக்கொண்டே குறிக்கப்பட்டுள்ளதை உணரலாம். இது போன்று க்ோடல் மலைப்பகுதியாகக் குறிக்கப்படவில்லை. தோன்றி யும் அவ்வாறே. இவ்வமைப்பைக்கொண்டு நோக்கினால், மலையிடத்துச் சிறப்பாகப் பூக்கும் செம்மை நிறம் வாய்ந்த இதன் பூ காந்தள் என்னும் பெயரால் குறிக்கப் பட்டுள்ளது தெளிவாகும். எனவே, காந்தள் என்பது பொதுவாயினும், மலை நிலத்தது என்ற அளவில் தனியொரு பூவாகின்றது. மலை நிலக் காந்தட்பூ தோன்றியைவிட வளமாகவும் சற்றுப் பெரியதாகவும், காம்பு அதைவிட நீண்டதாகவும் இன்றும் காட்சியளிக்கின்றது. இவற்றையெல்லாம் உட்கருத்தாகக் கொண்டே கபிலர் இதனைத் தனிப்பெயரில் குறித்தார். குறிஞ்சி நிலத்தில் தொகுக்கப் படும் பல நிறப் பூக்களில் இதன் குறிஞ்சித் தன்மை கருதி முதன் முதலில் குறித்தார். பின்னரும் விண்பெருஞ் சென்னிச்சினை இய காந்தள்’’ என்றார். இதுதான்-மலைப்பூவாகப் பூப்பதுதான் இதன் தனித்தகுதி. காநதள கை காந்தள் என்றாலே கை என்று கொள்ளும்படி இலக்கியங் களில் உவமை அமைந்துள்ளது. கையிலும் மெல்லிய மகளிர் கையே உவமையாகும். 'கை' என்று சொல்வதற்கும் மிகப் பொருத்தம் உண்டு. - - துடுப்பாக நீண்ட காம்பு முழங்கையிலிருந்து நீண்டிருக்கும் முன்னங்கை போன்றது. அக்காம்பில் மெல்லிய இதழ்கள்வண்ணந் தோய்ந்த விரல்களாகும், இக்கைவிரல் எத்துணை புலவர்களது உள்ளத்தைத் தொட்டுள்ளது? . . . . . . . . .