பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


மொட்டையாகத் தோன்றிய பாறை மொட்டாய் நின்றது. 'கல் தோன்றி மண் தோன்றாக் காலம்' -என வரலாற்றுக் க், லத்தை - பொழுதை வரையறுக்கும் அளவாக எழுந்த கல் மலை, போது + இ = போதி எனப்பட்டது. 'போதி, கோ, சிலை, இறும்பு, தடம் -சேந்தன் திவாகரம். பொற்றை, நாகம், சிலை, போதியும் மலைப் பெயர்’ -பிங்கலம். -என மலைப்பெயராகப் போதி’ என்னும் சொல் குறிக்கப்பட்டது. தொடர்ந்து ஆங்காங்கே ஏடாய்த் தோடாய், இதழாய்த் கற்பாறைகளினிடையே முகடு இன்றி, மூளித்தளமாகப் பொக்கை யாய்த் தோன்றிய மேடை ப் பாறை தாமரைப் பொகுட்டுபோலத் தோன்றியது. இத்தகைய மலைக்கு, 'பொருப்பொடு குவடு கல்லு ப் பொகுட்டொடு திகிரி குன்று' -என்றும் 'மாதிரம் கல்லே வரையே பொகுட்டு' ! -என்றும் பொகுட்டுப் பெயரை நிகண்டுகள் வகுக்கின்றன. மலைக்குப் 'பூதரம் என்பது ஒரு பெயர். மலைகளிலும் யூதரம் என்பது இமயத்தையும் மேருவையும் குறிக்கும். இதனைத் 'தரணி. யூதரம், ஒங்கல் பிறங்கல்' என்றும் யூதரம் ஆதிமலை பொன்மலை இமயம்' -என்றும் "யூதரம் மணி மலை பொன்மலை மலைமேரு என்ப* -என்றும் நிகண்டுகளில் காணலாம். இவ்வாறு மலையை மலராகக் காணும்போது இரண்டிற்கும் மூலம் ஒன்றுதான் என்பது போன்று இவற்றின் வேர்ச்சொல் உள்ளது. வளப்பத்தைக் குறிக்கும் மல்’ என்பதுதான் இரண்டின் வேர்ச்சொல் என்பதும் ஒரு பொருத்தத்தைக் காட்டுகிறது. 18 சூடா. இடப்பெயர் 31 15 சேத், தி இடப்பெயர் :38 14 பிங். நி : 495. 18 பிங், தி : 509