பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385


மலையடுக்கத்தில் இவ்வாறு தோன்றும் காந்தள், 'கொடிச்சியர் கைகூப்பி வரை தொழு கைபோல் எடுத்த நறுவின் குலையலங்கு காந்தள்' -எனப்பட்டது. மலைநாட்டுக் பெண்டிர் மலையைத் தொழுவது ஒரு மரபு. அம்மரபை வைத்துக் காந்தள் தொழுவதாகப் பாடினார். காந்தள் இவ்வாறு தொழும் கையாயிற்று காந்தள் வளையல்; காந்தள் யானை மருப்பு. மகளிர் கையான காந்தள், கைவளையலாகவும் அதிலும் உடைந்த வளையலாகவும், "உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் " (புறம் : 90 : 1) "வளை உடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்' (மலை : 519) எனக் குறிக்கப்பட்டது. இங்கு வளைய்ல் என்றது மஞ்சளும் செம் மையுமாக வண்ணம் திட்டப்பட்ட வளையலைக் குறிக்கும். வளையலான காந்தள் யானையின் மருப்பாக அமைந்தது. யானை மருப்பு வெண்மையானது. காந்தாளோ செம்மையானது. எவ்வாறு பொருந்தும்? காந்தள் மலர் மருப்பாகக் குறிக்கப்பட வில்லை. அதன் முகையின் முனை செம்மை நிறங்காட்டுவதன்றோ? அதனைக்கொண்டு, 'கொன்ற யானைக் கோடு கண்டன்ன செம்புடைக் கொழுமுனை அவிழ்ந்த காந்தள்'? - எனக் கம்பூர்கிழான் பாடக் கபிலரும், “பு:கர்துதல் புண்செய்த புன்கோடு போல உயர்முகை நறுங்காந்தள் நாடொறும் புதிது ஈன' - என்றார். கன் : 40 , 11:12, 8 கலி 53 : 4, 5, 2 தற் 294 : 6, 7, 歌 25