பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/425

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
389


மணக்கும், சுவைக்கும். ... " நிறத்தாலும் வடிவாலும் மலர்ச்சியாலும் இலக்கியச் சான்று கள் பெற்ற காந்தள் மணத்தாலும் தேனாலும் பெற்ற இடங்களும் உள. "நாறு காந்தள் என்றும், சிலம்பு கமழ் காந்தள் என்றும் இதன் மணக்குறிப்பு காணப்படும். இதனைச் சூடியதனால் மகளிர் தம் உடலில் இதன் மணம் ஏறப் பெற்றனர். ஒருத்தி, கவிழ்ந்த கண்ணோடு நோக்கி, மலர்ந்த காந்தள் நாறுபவளாகத் தலைவனால் குறிக்கப்பட்டாள். ஒருத்தி, காந்தள் நாறும் சுடர் நெற்றியை உடையவள்? எனப்பட்டாள். இவையிரண்டும் கபிலர் பாட்டின் கருத்துகள் இம்மணம் கருதியும் இதன் எழில் கருதியும் ஆடவரும் மகளிரும் விரும்பிச் சூடினர். பெரிதும் கண்ணியாகவே சூடப் பட்டது. ప్స్లో $r 'மலைச் செங்காந்தள் கண் ணி' (நற்றினை : 173 :2) காந்தள் அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்' (பதிற்று பத்து : 81 : 22) என்பதால் செழுங்குடிச் செல்வரும். “காந்நள் அம் கண்ணி கொலைவில் வேட்டுவர் (பதிற்று : 30 - 9) என்பதால் கொலைகார வேட்டுவரும், சூடினர் கோவலர், .. காந்தள் அம் கடிமலர்க் கண்ணி நெற்றிய”3 ராக விளங்கியதைத் திருத்தக்க தேவர் குறித்தார். முருகனுக்கு உரிய அடையாளப் பூ காந்தள். "கரும்பு மூசாச் சுடர் ப் பூங் காந்தள் பெருள்தண் கண்ணி மிலைத்த சென்னியன்'4 - எனப் பட்டான். 1 ஐங் : 259: 4, 5. 2 ஐங் : 254 : 2, 3, 2 சீவ, சி : 1848 4 திருமுருக : 48, 44,