பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390


இவ்வாறு எளியோரும், செல்வரும், தெய்வமும் சூடும் மலராகக் காந்தள் விளங்கியது. இதன் தேனும் குறிக்கப்படும் ஒன்றாக இருந்ததை அறிகின்றோம். தேனில் கொல்லிமலைத்தேன் சுவையுடையது என்பர். அம்மலையில் மலர்ந்த காந்தளின் தேன் குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட ஒன்று. 'கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் காந்தள் நிறைய மண்டிப் பூத்தது. தேனீக்கள் பாய்ந்து பாய்ந்து கோதித் தேனை எடுத்து அடைகளில் தொகுத்தன. அப்படித் தொகுக்கப்பட்ட தேனடைகள் பல தொகுதி தொகுதியாக இருந்தன என்பதைக்கூறும் பாடல் இது: 心s、 "... ... ... ... ..கொல்லிக் குடவயின் அகல் இலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து பறவை இழைத்த பல்கண இறாஅல் . தேனுடை நெடுவரை' -இவ்வாறு மலையின் மேற்கு எனக்குறித்ததும் பலகணமாகத் தேனடை இருந்ததும் ஒருகாலத் தில் காந்தள் தேன் குறிக்கத்தக்கதாக விளங்கியதை உணரலாம். இத்தேனைத் தொகுக்கும் தேனிக்கள் இத்தேனில் மிக ஆர்வங்கொண்டவை போலும். மலரைக் கண்டதும் பாய்ந்து விழ்ந்து ஊதியதாகப் பாடியுள்ளனர்.” மலரும் வரை காத்திருக்கப் பொறுக்காது வண்டுகள் இம்மலரைக் கிண்டி மலரச்செய்து தேனைப் பருகும். மலைப்பகுதிகளுக்குத்தேன் உண்ண விரும்பும் வண்டுகள் ‘காந்தள் மலரா விட்டால் செல்லா என்று கண்டோம். காந்தளில் ஊதிய மணிநிறத் தும்பி நல்லிசையைத் தரும் யாழ் நரம்பின் ஓசைபோன்று முரலுமாம். இதன் தேனின் விடாப்பிடி ஆர்வத்தால் இதில் ஊதிக்கொண்டே இருந்த தும்பி இசையின் தாளம் கெடும் அளவில் தடுமாறி ஊதுமாம். பல மலர்களில் ஊதியவண்டு இறுதியில் காந்தளின் தேனைப்பருகின் இம்மலரிலேயே உறக்கத்தைக் கொள்ளும் என்றனர். தற் : 185 : 7-10, குறு : 265 : 1, 2. தற் : 17, 9-11 பதிற் : 87 :29-31 உரைக்குறிப்பு அகம் : 182 : 12, 18.