பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391


வண்டு உண்ணாதா? மலைக்கடவுளுக்கு இப் பூ உரியதாகையால் கடவுட் காந்தள்' எனப்படும். கடவுட் பூவில் வண்டு படியாது என் றொரு நம்பிக்கை. "மலர்ந்த காந்தளினது மலரை, இது தெய்வத்திற்கு உரியதென்று அறிந்தும் அதன்பால் நீங்காமல் ஊதியது தும்பி.-உ. வே. சா. காந்தள், வேங்கை கண்டதும் (கடவுளுக்கு உரியன வாய்) முதலில் மலர்ந்த பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணும் என்றும், உண்டால் சிறகு உதிர்ந்து விடும் என்றும் நூலோர் கூறுவர்” - அவ்வை சு. துரைசாமி. இஃதொரு நம்பிக்கை மரபு. "சுரும்பு உண மலர்ந்த கடவுட் காந்தள்' என்று சுரும்பு உண்ணவே கடவுட் காந்தள் மலர்ந்ததாக பாடப்பட்டமை, மேற்கண்ட நம்பிக்கையை ஒரு மனநிலையளவிலேயே நிறுத்துகின்றது. இஃது வேங்கைப் பூ விளக்கத்தில் விரிவாக ஆராயப்படும். இலக்கணப் பெயர் பலவகைச் சிறப்போடு வரவேற்பும் பெற்றுள்ள காந்தள் இலக்கண விதிக்கும் தனது பெயர் சூட்டப் பெற்றது. புறத்திணை வில் இதன் பெயரில் ஒரு துறை அமைந்தது. தொல்காப்பியம் அதற்கு, -- 'நெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்'8 உஎன வெறியாட்டயர்ந்த காந்தள்" பெயர் சூட்டியது. மேலும் மடல் ஏறுவதற்குப் பெயராகவும் இக்காந்தள் கூறப்பெறும். இதனை இளப்பூரணர்: + 2 பதிற் : 67 : 29-30 உரைக்குறிப்பு 8 தொல், பொருள் : புறத்திணை : 62 : 1, 2,